For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மீண்டும் பறிபோகிறதா ஃப்ளூ ஜெர்ஸி வாய்ப்பு... யோ யோ டெஸ்டில் தோல்வி....சோகமடைந்த தமிழக வீரர்

பெங்களூரு: இந்திய அணியில் இடம்பிடித்த ராகுல் தேவட்டியா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் உடற்தகுதி தேர்வில் தோல்வியடைந்ததால் அவர்கள் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

இந்திய வீரர்களின் உடற்தகுதியை உறுதி செய்ய பிசிசிஐ சார்பில் கடந்த சில ஆண்டுகளாக யோயோ ஃபிட்னெஸ் டெஸ்ட் நடத்தப்படுகிறது.

மொத்தமே 6 ஓவர்கள்தான்..4வது டெஸ்டில் இருந்து விலகும் பும்ரா..ஒன்றை மட்டும் கற்றுக்கொண்டதாக கருத்து மொத்தமே 6 ஓவர்கள்தான்..4வது டெஸ்டில் இருந்து விலகும் பும்ரா..ஒன்றை மட்டும் கற்றுக்கொண்டதாக கருத்து

இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே வீரர்கள் இந்திய அணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இந்நிலையில் ராகுல் தேவட்டியா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.

டி20 தொடர்

டி20 தொடர்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடிவரும் இந்திய அணி, அடுத்ததாக டி20 தொடர்களில் ஆடவுள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் அகமதாபாத்தில் முறையே மார்ச் 12, 14, 16, 18 மற்றும் 20ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதற்கான தகுதியாக வீரர்களை தேர்ந்தெடுக்க உடற்தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.

யோ யோ

யோ யோ

ஒரு வீரர் 2 கிலோ மீட்டர் தூரத்தை 8.5 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும் அல்லது யோ யோ டெஸ்டில் 17.1 புள்ளிகள் பெற வேண்டும். ஆனால் ராகுல் தேவட்டியா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இரண்டிலுமே தேர்ச்சி பெறவில்லை. இதனால் அவர்கள் இந்திய அணியில் இடம்பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது. எனினும் அவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்டம்

ஆட்டம்

கடந்த ஐபிஎல் தொடரில் ராகுல் தேவட்டியா காட்டிய அதிரடி காரணமாகவே இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. மொத்தம் 14 போட்டிகளில் ஆடிய அவர், 255 ரன்கள் மற்றும் 10 விக்கெட்களை எடுத்தார். அவரின் சாராசரி 42.05 ஆகும். குறிப்பாக பஞ்சாப் அணிக்கு எதிராக 53 ரன்கள் விளாசியது கவனத்தை பெற்றது. அதில் ஒரே ஓவரில் 5 சிக்ஸர் அடித்து அசத்தினார்.

வருண்

வருண்

கடந்த ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் ஆடிய வருண் சக்கரவர்த்தி 17 விக்கெட்களை கைப்பற்றினார். இவர் ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி.20 தொடரில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் காயம்காரணமாக கடைசி நேரத்தில் விலகியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, March 3, 2021, 17:12 [IST]
Other articles published on Mar 3, 2021
English summary
Rahul Tewatia & Varun Chakravarthy fails to clear the fitness test ahead of T20I series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X