For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதுவரை பார்க்காத புது மைதானம்.. 3வது ODI போட்டி.. இந்திய அணிக்கு காத்துள்ள சவால்கள்?- பிட்ச் விவரம்

ராய்பூர்: நியூசிலாந்து அணியுடனான 2வது ஒருநாள் போட்டிக்கான மைதானத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு புதிய சவால் காத்துள்ளது. இந்த போட்டியும் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் போகும்.

இரு அணிகளும் மோதும் இந்த போட்டி நாளை மதியம் ராய்பூரில் உள்ள சாஹீத் வீர் நாராயண் சிங் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் சுப்மன் கில்லின் இரட்டை சதம், சிராஜின் 4 விக்கெட்கள், ஷர்துலின் த்ரில் ஓவர் என பரபரப்புடன் முடிந்தது.

எனவே இரண்டாவது போட்டியில் அதே ஆதிக்கத்தை தொடர இந்திய அணியும், தோல்விக்கு பதிலடியை கொடுக்க நியூசிலாந்து அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாருப்பா நீ.. பிராஸ்வெல் அதிரடி சதம்.. இந்தியாவுக்கு மரண பயத்தை காட்டிய நியூசிலாந்து.. திரில்லர் யாருப்பா நீ.. பிராஸ்வெல் அதிரடி சதம்.. இந்தியாவுக்கு மரண பயத்தை காட்டிய நியூசிலாந்து.. திரில்லர்

காத்துள்ள சவால்

காத்துள்ள சவால்

இந்நிலையில் இந்த போட்டியில் யாரும் எதிர்பார்க்காத பல விஷயங்களை எதிர்பார்க்கலாம். ஏனென்றால் ராய்பூர் மைதானத்தில் நடைபெறும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி இதுவாகும். இதற்கு முன்பு வரை 6 ஐபிஎல் போட்டிகள் மட்டுமே நடந்துள்ளன. இதனால் இங்கு பிட்ச்-ன் தன்மை எப்படி மாறும், 50 ஓவர்களில் பந்தின் வேகம் என்னவாக இருக்கும் என்பது குறித்து இரு அணிகளுக்குமே சஸ்பன்ஸாக இருக்கும்.

 பிட்ச் ரிப்போர்ட்

பிட்ச் ரிப்போர்ட்

மற்ற இந்திய களங்களை போலவே பேட்டிங்கிற்கு நன்கு உதவக்கூடிய ஒன்றாக இந்த பிட்ச் இருக்கும். ஆனால் நேரம் போக, போக பிட்ச் மிகவும் ஸ்லோவாகும் எனக்கூறப்படுவதால் வேகப்பந்துவீச்சாளர்கள் சிரமப்படுவார்கள். அவர்களின் ஸ்லோயர் பந்துகள், கட்டர் பந்துகள் மட்டுமே எதிரணியிடம் எடுபடும். மற்றபடி ஸ்பின்னர்கள் மட்டுமே தாக்கம் ஏற்படுத்தலாம்.

டாஸில் என்ன செய்யலாம்?

டாஸில் என்ன செய்யலாம்?

இங்கு டாஸ் வென்றால் நிச்சயம் பேட்டிங்கை தான் தேர்வு செய்ய வேண்டும். ஏனென்றால் பிட்ச் ஓரளவிற்கு நன்றாக இருக்கும் போதே அதிக ரன்களை அடித்துவிட்டால், 2வதாக ஆடும் அணிக்கு ஸ்லோயர் பந்துகளால் நெருக்கடி தரலாம். இதுமட்டுமல்லாமல் பவுண்டர் எல்லைகள் பெரிது என்பதால், அழுத்தத்தில் கேட்ச்-கள் வழங்குவதற்கும் அதிக வாய்ப்பை உண்டாக்கி தரலாம்.

அணி மாற்றங்கள்?

அணி மாற்றங்கள்?

இந்திய அணியை பொறுத்தவரையில் பேட்டிங் வரிசை நன்றாகவே செயல்பட்டு வருகின்றனர். தொடர்ச்சியாக 300+ ரன்களை அடித்து வருவதால் எந்தவித மாற்றமும் இருக்காது எனத்தெரிகிறது. ஆனால் பவுலிங்கில் ஷர்துல் தாக்கூரை நீக்கிவிட்டு, உம்ரான் மாலிக் மீண்டும் அணிக்குள் வர வாய்ப்புள்ளது. முதல் போட்டியில் நிறைய ரன்களை கசியவிட்டிருந்ததால் நடவடிக்கை எடுக்கலாம்.

Story first published: Friday, January 20, 2023, 9:44 [IST]
Other articles published on Jan 20, 2023
English summary
Raipur pitch report ahead of India vs new zealand 3rd ODI match, Rohit sharma to face the challenges
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X