For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மீன் தொட்டியை க்ளீன் செஞ்சது குத்தமாய்யா.. இப்படி கையை கிழிச்சிக்கிட்டு இருக்க அணிக்கு பெரிய இழப்பு!

டெல்லி : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 4வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இந்நிலையில் கையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள ஜோப்ரா ஆர்ச்சர் அணியில் இல்லாதது பெரிய இழப்பு என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநர் குமார சங்ககாரா குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூடிய விரைவில் அணியில் இணைவார் என்றும் சங்ககாரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

4வது போட்டி இன்று துவக்கம்

4வது போட்டி இன்று துவக்கம்

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 4வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்றைய தினம் மோதவுள்ளன. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பௌலர் ஜோப்ரா ஆர்ச்சர் இடம்பெறவில்லை. மாறாக அவருக்கு வலது கையில் செய்யப்பட்டுள்ள அறுவை சிகிச்சை காரணமாக அவர் சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

கையில் அறுவை சிகிச்சை

கையில் அறுவை சிகிச்சை

ஏற்கனவே கடந்த ஜனவரி மாதத்தில் எற்பட்ட காயம் காரணமாக அவர் தனது வீட்டில் ஓய்வு எடுத்துவந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் மீன் தொட்டியை சுத்தம் செய்தபோது கையில் க்ளாஸ் துகள்கள் ஏறியதையடுத்து அவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அந்த துகள்கள் நீக்கப்பட்டுள்ளன.

நெருக்கடி அளிக்காது

நெருக்கடி அளிக்காது

இந்நிலையில் அவர் விரைவில் அணியில் இணைய வேண்டும் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நெருக்கடி அளிக்காது என்று அந்த அணியின் கிரிக்கெட் இயக்குநர் குமார சங்ககாரா விளக்கம் தெரிவித்துள்ளார். ஆயினும் துவக்க போட்டிகளில் அவர் அணியில் இல்லாதது அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

சங்ககாரா நம்பிக்கை

சங்ககாரா நம்பிக்கை

அவர் தனது பிட்னசை நிரூபித்து கூடியவிரைவில் அணியில் இணைவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆயினும் அவர் ஐபிஎல்லின் சில பகுதிகளில் பங்கேற்று விளையாடுவார் என்றும் சங்ககாரா கூறியயுள்ளார். முன்னதாக அவரது இருப்பை வைத்தே அணியின் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சங்ககாரா கருத்து

சங்ககாரா கருத்து

ஐபிஎல்லுக்காக மட்டுமின்றி அவரது சர்வதேச கமிட்மெண்ட்டுகளுக்காக அவர் கூடிய விரைவில் தேறுவது அவசியம் என்றும் சங்ககாரா மேலும் தெரிவித்துள்ளார். கடந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய ஜோப்ரா ஆர்ச்சர் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி முக்கிய பௌலராக வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, April 12, 2021, 16:33 [IST]
Other articles published on Apr 12, 2021
English summary
He was the tournament's most valuable player last season with 20 wickets
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X