For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே பிளே-ஆப் தகுதியை தட்டிப்பறித்த ராஜஸ்தான் அணி.. 6வது இடத்திற்கு முன்னேற்றம்

துபாய் : நேற்றைய தினம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.

இதையடுத்து 12 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 10 புள்ளிகளுடன் ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதையடுத்து சிஎஸ்கே பிளே-ஆப் சுற்றுக்கு செல்வதற்கான சொற்ப நம்பிக்கையும் தகர்ந்துள்ளது.

சிஎஸ்கே வெற்றி

சிஎஸ்கே வெற்றி

நேற்றைய தினம் வார விடுமுறையையொட்டி ஐபிஎல்லில் இரண்டு போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் போட்டி சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி இடையில் நடைபெற்றது. இதில் சிஎஸ்கே 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து அதன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இது அந்த அணியின் 4வது வெற்றி.

ராஜஸ்தான் அணி அபார வெற்றி

ராஜஸ்தான் அணி அபார வெற்றி

இந்நிலையில் அடுத்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் மற்றும் சஞ்சு சாம்சனின் அபார ஆட்டத்தால் இந்த வெற்றி சாத்தியப்பட்டுள்ளது.

6வது இடத்தில் ராஜஸ்தான் அணி

6வது இடத்தில் ராஜஸ்தான் அணி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்று புள்ளிகள் அடிப்படையில் முன்னேறியுள்ளதையடுத்து சிஎஸ்கேவின் பிளே-ஆப் கனவு தகர்ந்துள்ளது. இதனிடையே, ராஜஸ்தான் அணி இந்த வெற்றியின்மூலம் 12 போட்டிகளில் 10 புள்ளிகளை பெற்று ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தொடர்ந்து வெற்றி பெறும் பட்சத்தில் அந்த அணிக்கு பிளே-ஆப் வாய்ப்பு காணப்படுகிறது.

2வது இடத்தில் ஆர்ச்சர்

2வது இடத்தில் ஆர்ச்சர்

கே.எல். ராகுல் மற்றும் ஷிகர் தவான் முறையே ஆரஞ்ச் கேப்பிற்கான போட்டியில் முதல் இடங்களில் உள்ள நிலையில், நேற்றைய போட்டியில் அரைசதம் அடித்துள்ள விராட் கோலி, 3வது இடத்தில் 415 ரன்களுடன் தொடர்கிறார். இதேபோல, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோப்ரா ஆர்ச்சர் நேற்றைய தினம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ரபடாவை தொடர்கிறார்.

Story first published: Monday, October 26, 2020, 10:40 [IST]
Other articles published on Oct 26, 2020
English summary
Jofra Archer took two wickets for Rajasthan Royals to move up to the 2nd spot in the Purple Cap
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X