For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நம்மாளுகளை மட்டும் வச்சு நடத்தி முடிக்கலாம்ல.. ராஜஸ்தான் ராயல்ஸின் ஆசையைப் பாருங்க!

டெல்லி: இந்திய வீரர்களை மட்டும் வைத்து ஐபிஎல் போட்டிகளை நடத்தலாம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் கருத்து தெரிவித்துள்ளது.

Recommended Video

போட்டி நடந்தால் மட்டுமே வீரர்களுக்கு சம்பளம்

தற்போதைய அசாதாரண நிலையில் இது சாத்தியம்தான். சுருக்கமான முறையில் நம்முடைய வீரரர்களை மட்டும் வைத்து போட்டிகளை நடத்தலாம் என்றும் அந்த அணியின் தலைமை செயலதிகாரி ரஞ்சித் பர்தகுர் கூறியுள்ளார்.

ஐபிஎல் குறித்த முடிவை இதுவரை பிசிசிஐ எடுக்காமல் உள்ளது. இந்தியாவில் தொடர்ந்து கொரோனாவைரஸ் பாதிப்பு அதிகரித்தபடி உள்ளது. எனவே திட்டமிட்டபடி ஏப்ரல் 15ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதில் சிக்கல் இருக்கிறது.

ஸ்மித்தும், வார்னரும் இருந்தாலே.. வேற லெவல்.. பட்டையைக் கிளப்பலாமே.. டிம் பெய்ன் சொல்கிறார்!ஸ்மித்தும், வார்னரும் இருந்தாலே.. வேற லெவல்.. பட்டையைக் கிளப்பலாமே.. டிம் பெய்ன் சொல்கிறார்!

ரஞ்சித்தின் ஐடியா இது

ரஞ்சித்தின் ஐடியா இது

இந்த நிலையில் இப்படி ஒரு ஐடியாவைக் கூறியுள்ளார் ரஞ்சித். இப்போட்டித் தொடரை தள்ளி வைத்தபடி ஏப்ரல் 15ம் தேதி நடத்தலாமா அல்லது நிரந்தரமாக தள்ளிப் போடலாமா என்ற குழப்பத்தில் பிசிசிஐ ஏற்கனவே உள்ளது. இந்த ஆண்டின் கடைசிக்கு ஐபிஎல் போட்டிகள் தள்ளிப் போடப்படலாம் என்ற ஒரு தகவலும் உலா வருகிறது. எதுவுமே இன்னும் முடிவாகாமல் உள்ளது.

இந்திய வீரர்களைக் கொண்டு நடத்தலாம்

இந்திய வீரர்களைக் கொண்டு நடத்தலாம்

முன்னதாக மார்ச் 29ம் தேதி இப்போட்டிகள் தொடங்குவதாக இருந்தன. ஆனால் லாக்டவுன் உள்ளிட்டவை காரணமாக ஏப்ரல் 15ம் தேதிக்கு தள்ளிப் போட்டுள்ளனர். ஆனால் அதுவும் வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. காரணம் நிலைமை இன்னும் சரியாகவில்லை என்பதால். இந்த நிலையில் ரஞ்சித் கூறுகையில், இந்திய வீரர்களை மட்டும் வைத்து போட்டித் தொடரை நடத்த நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். இந்திய பிரிமீயர் லீக் என்ற பெயருக்கும் அது பொருத்தமாகவே இருக்கும் என்றார்.

அசாதாரண சூழல்

அசாதாரண சூழல்

அணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் எந்த முடிவையும் எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இது அசாதாரண நேரம்தான். பிசிசிஐ விரைவில் நல்ல முடிவை எடுக்கும் என்று நம்புகிறோம். இந்திய வீரர்களை மட்டும் வைத்து போட்டியை இதுவரை நடத்த முடியாத நிலை இருந்தது. தற்போது முற்றிலும் இந்திய வீரர்களை மட்டும் வைத்து போட்டியை நடத்தக் கூடிய வாய்ப்புகள் வந்துள்ளன. எனவே இந்தப் போட்டித் தொடரை சுருக்கமாக நடத்தலாம் என்பது எனது கருத்து என்று கூறியுள்ளார் ரஞ்சித் பர்தகுர்.

முடிவெடுக்குமா பிசிசிஐ

முடிவெடுக்குமா பிசிசிஐ

இந்த முடிவை பிசிசிஐதான் எடுக்க வேண்டும். அநேகமாக ஏப்ரல் 15ம் தேதிக்குப் பிறகு இந்த முடிவை பிசிசிஐ எடுக்கலாம் என்று கூறியுள்ளார் ரஞ்சித். ஆனால் இதற்கு வாய்ப்பு இருக்குமா என்று தெரியவில்லை. காரணம் இன்னும் சூழல் மாறாத நிலையில் பிசிசிஐ தன்னிச்சையாக இப்படி ஒரு முடிவை எடுத்தால் அரசு அனுமதிக்குமா என்பது கேள்விக்குறி. அதை விட முக்கியமாக மக்களின் கடுமையான எதிர்ப்புக்குள்ளாகவும் நேரிடும். மேலும் ரசிகர்கள் இல்லாமல் எப்படி போட்டியை நடத்துவது என்பதும் உள்ளது.

Story first published: Wednesday, April 1, 2020, 18:27 [IST]
Other articles published on Apr 1, 2020
English summary
Even a shortened IPL with just Indian players would be good enough -Rajasthan Royals CEO
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X