For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மறக்க முடியாத தோல்வி.. அந்த நாள் இரவு.. சிந்திய கண்ணீருக்கு "திருப்பிக் கொடுக்க" ராஜஸ்தான் ரெடி

துபாய்: இதோ... அருமையான மேட்ச் இன்று இரவு உங்கள் டிவியை அலங்கரிக்க காத்திருக்கிறது. ஏன்னா.. மோதல் அப்படிப்பட்ட உஷ்ணம் வாய்ந்தது.

Rajasthan royals ready to face punjab ipl 2021

ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாம் பகுதி, அமீரகத்தில் நேற்றுமுன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் சென்னை மும்பை அணியை வீழ்த்த, நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரை கொல்கத்தா வீழ்த்தியது.

இந்நிலையில், இன்று துபாயில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் களம் காண்கின்றன.

Recommended Video

PBKS vs RR பரபரப்பான ஆட்டத்தில் Rajasthan Royals வெற்றி | Oneindia Tamil

இவ்விரு அணிகளும், இந்த சீசனில் முதல் பாதியில் மோதிய போட்டியை ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். இதில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான், 221 ரன்கள் குவிக்க, ராஜஸ்தான் அணியில் தனி ஆளாக போராடிய கேப்டன் சஞ்சு சாம்சன் 63 பந்துகளில் 119 ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். பஞ்சாப் ரசிகர்கள் கூட, தங்கள் அணி வெற்றிப் பெற வேண்டும் என்பதை மறந்து சாம்சனின் அபார ஆட்டத்தை கண்டு ரசித்தனர்.

ஆனால், 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது ராஜஸ்தான். இந்நிலையில், இப்போது இரண்டாம் பகுதி ஐபிஎல் தொடரில் மீண்டும் இரு அணிகளும் நேருக்கு நேர் இன்று மோதுகின்றன. முதல் பாதி தோல்விக்கு வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுக்க ராஜஸ்தான் தயாராகி வருகிறது. அதே சமயம், பஞ்சாப்பும் லேசுப்பட்ட அணி அல்ல.

கேப்டன் லோகேஷ் ராகுலின் மிரட்டலான ஃபார்ம், அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் அச்சுறுத்தலே. தவிர மாயங்க் அகர்வால், "யுனிவர்சல் பாஸ்" க்றிஸ் கெயில், நிகோலஸ் பூரன், தீபக் ஹூடா என்று அதிரடிக்கு பஞ்சம் இல்லாத அணி பஞ்சாப். தற்போது புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் தலா 6 புள்ளிகளுடன் முறையே 6வது மற்றும் 7வது இடத்தில் உள்ளன. ராஜஸ்தானுக்கு இன்றைய போட்டியை சேர்த்து இன்னும் 7 போட்டிகள் மீதமுள்ள. பஞ்சாபுக்கு 6 போட்டிகளே மீதமுள்ள. இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்று பற்றி நினைத்து பார்க்க வேண்டுமெனில், குறைந்தது 5 போட்டிகளில் வெற்றிப் பெற்றாக வேண்டும்.

 தொடர்ச்சியாக 5வது அரைசதம்.. 20,000 ரன்கள் - பெண்கள் கிரிக்கெட்டின் உச்சம் மிதாலி ராஜ் தொடர்ச்சியாக 5வது அரைசதம்.. 20,000 ரன்கள் - பெண்கள் கிரிக்கெட்டின் உச்சம் மிதாலி ராஜ்

இந்த போட்டி குறித்த மேலும் சில சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம்,

ஐபிஎல்லில் 3000 ரன்களை கடக்க, கேஎல் ராகுலுக்கு இன்னும் 22 ரன்கள் தேவை.

கேஎல் ராகுலுக்கு ஐபிஎல்லில் 100 சிக்ஸர்களை எட்ட 4 சிக்ஸர்கள் தேவை.

ஐபிஎல்-ல் 5000 ரன்களை அடிக்க க்றிஸ் கெயிலுக்கு இன்னும் 10 ரன்கள் தேவை. இதன் மூலம், ஐபிஎல் தொடரில், 5000 ரன்களை கடக்கும் ஏழாவது வீரர் ஆகிறார்.

மயங்க் அகர்வால் ஐபிஎல்லில் 2000 ரன்களை நிறைவு செய்ய 46 ரன்கள் தேவை.

ஸ்ரேயாஸ் கோபால் ஐபிஎல்லில் 50 விக்கெட்டுகளை நிறைவு செய்ய இரண்டு விக்கெட்டுகள் தேவை.

ஐபிஎல் 2021ல் பஞ்சாப் அணியின் நிக்கோலஸ் பூரன் அடித்த ஸ்கோர்: 0, 0, 9, 0, 0, 19, 0

Story first published: Tuesday, September 21, 2021, 16:56 [IST]
Other articles published on Sep 21, 2021
English summary
Rajasthan royals ready to face punjab ipl 2021 - ஐபிஎல் 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X