For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

RR vs DC: டெல்லியை துவைத்தெடுத்த ரகானே அதிரடி சதம்... 192 ரன்கள் வெற்றி இலக்கு

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக டெல்லி கிழக்கு தொகுதியில் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார்.

ஜெய்பூர்:டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி, ரகானேவின் அதிரடி சதத்தால் 191 ரன்களை குவித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் மொத்தம் 56 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 39 போட்டிகள் நிறைவடைந்துள்ளது. 40வது போட்டியான இன்றைய போட்டியில் ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் களம் காண்கின்றன.

1
45916

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

சென்னை ரசிகர்களே..! இந்த அதிர்ச்சியை தாங்கிக்குங்க.. ஐபிஎல் பைனல் இங்கல்ல.. ஹைதராபாத்தில் நடக்குது சென்னை ரசிகர்களே..! இந்த அதிர்ச்சியை தாங்கிக்குங்க.. ஐபிஎல் பைனல் இங்கல்ல.. ஹைதராபாத்தில் நடக்குது

மாற்றம் கிடையாது

மாற்றம் கிடையாது

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டியில் களம் இறங்க உள்ளனர்.

சேர்ப்பு

சேர்ப்பு

அதே போல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் சந்தீப் லமிசன்னே நீக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக க்ரிஸ் மோரிஸ் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார்.

சாம்சன் அவுட்

சாம்சன் அவுட்

முதலில் களம் இறங்கிய ராஜஸ்தான் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்களில் ஒருவரான சஞ்சு சாம்சன் 2வது ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட்டாகினர்.

ரகானே சூப்பர்

ரகானே சூப்பர்

அதன் பிறகு 2வது விக்கெட்டுக்கு ரகானோவுடன் களம் கண்டார் கேப்டன் ஸ்மித். ஒரு பக்கம் தொடக்க விக்கெட் விழுந்த அதிர்ச்சியில் ரசிகர்கள் இருக்க... அதை பற்றி கவலைப்படாமல் வெளுக்கு ஆரம்பித்தார் ரகானே.

ஸ்மித் கைகொடுத்தார்

ஸ்மித் கைகொடுத்தார்

அவருக்கு கை கொடுக்கும் வகையில் கேப்டன் ஸ்மித்தும் அதிரடியாக ஆடினார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு குவித்த ரன்களை கண்டு டெல்லி அதிர்ந்தது. டெல்லி பந்துகளை பவுண்டரிகளுக்கு விரட்டுவதிலேயே இருவரும் குறியாக இருந்தனர்.

2வது விக்கெட், 130 ரன்கள்

2வது விக்கெட், 130 ரன்கள்

2வது விக்கெட்டுக்கு கைகோர்த்த இந்த ஜோடி... 130 ரன்கள் குவித்தது. கிட்டத் தட்ட 12 ஓவர்களில் இந்த ரன்களை இருவரும் குவித்தனர். ஸ்கோர் 135 ரன்களாக இருந்த போது 50 ரன்கள் எடுத்திருந்த ஸ்மித் ஆட்டமிழந்தார்.

ரகானே சூப்பர் சதம்

ரகானே சூப்பர் சதம்

அடுத்து வந்த ஸ்டோக்ஸ் 8 ரன்களில் வெளியேறினார். டர்னர் கோல்டன் டக் ஆனார். பின்னி 19 ரன்களிலும், பராக் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தார். விக்கெட்டுகள் ஒருபுறம் வீழ்ந்தாலும் அசராத ரகானே சதம் அடித்தார். ஆட்டமிழக்காமல் 105 ரன்கள் குவித்தார்.

192 ரன்கள் இலக்கு

192 ரன்கள் இலக்கு

ஸ்மித் ஆட்டமிழந்த பின்னர், ரகானேவுக்கு யாரும் ஆதரவாக களத்தில் இல்லை. அதனால் எளிதாக 200 ரன்களை கடக்கும் என்று எதிர்பார்த்திருந்த ஸ்கோர் 191/6 என்ற கணக்கில் முடிவுற்றது. 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 192 ரன்களை வெற்றி இலக்காக டெல்லிக்கு நிர்ணயித்துள்ளது.

Story first published: Monday, April 22, 2019, 22:26 [IST]
Other articles published on Apr 22, 2019
English summary
Rajasthan royals scored 191/6 runs against delhi capitals.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X