நியூசிலாந்தில் பென் ஸ்டோக்ஸ்.. ஐபிஎல் ஆரம்ப போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிப்பு

துபாய் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய வீரரும் 12.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டவருமான இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல்லின் ஆரம்ப போட்டிகளில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள தன்னுடைய தந்தையை சந்திப்பதற்காக நியூசிலாந்து சென்றுள்ள ஸ்டோக்ஸ் தற்போதுதான் 14 நாட்கள் குவாரன்டைனை முடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் அணிக்கு திரும்பவது குறித்து இன்னும் அவருடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேசவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இதுக்கெல்லாமா அவுட் கேப்பீங்க? ஊரே கூடி சிரித்த சம்பவம்.. அசிங்கப்பட்ட இங்கிலாந்து!

நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ்

நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர வீரரான இங்கிலாந்து ஆல் -ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இந்த ஆண்டு ஐபிஎல் சீசனுக்காக 12.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன்னுடைய தந்தையை சந்திப்பதற்காக இவர் கடந்த பாகிஸ்தானுக்கு எதிரான தொடரிலிருந்து பாதியிலேயே சென்றார்.

முதல்கட்ட போட்டிகளில் பங்கேற்க மாட்டார்

முதல்கட்ட போட்டிகளில் பங்கேற்க மாட்டார்

இந்நிலையில் நியூசிலாந்தில் இவர் தற்போதுதான் தன்னுடைய 14 நாட்கள் குவாரன்டைனை முடித்துள்ளதாகவும், இதையடுத்து தன்னுடைய தந்தையுடன் அவர் நேரத்தை செலவழிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இவர் ஐபிஎல் தொடரின் முதல்கட்ட போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

ஆலோசனை மேற்கொள்ளவுள்ள அணி

ஆலோசனை மேற்கொள்ளவுள்ள அணி

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் அவரது சூழலை புரிந்து கொண்டு அவரை அழைக்கவில்லை என்று தெரிகிறது. அவர் தனது தந்தையுடன் சில நாட்கள் செலவிட்ட பின்பே அவரை அணிக்கு அழைப்பது குறித்து அவருடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று அணி சார்பில் கூறப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் தொடரில் சிறப்பு

மேற்கிந்திய தீவுகள் தொடரில் சிறப்பு

29 வயதான பென் ஸ்டோக்ஸ், இதுவரை 67 டெஸ்ட் போட்டிகள், 95 ஒருநாள் போட்டிகள், 26 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். கடந்த ஆண்டில் நடைபெற்ற உலக கோப்பை தொடர் மற்றும் ஆஷஸ் தொடர்களில் சிறப்பான திறனை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தார். சமீபத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்ற காரணமாக இருந்தார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Ben Stokes could miss Rajasthan Royals' first few matches in IPL 2020
Story first published: Monday, September 7, 2020, 18:55 [IST]
Other articles published on Sep 7, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X