For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

RCB vs RR: மழை, 5 ஓவர்கள், ஹாட்ரிக்.. என்ன மேட்ச் இது? கடைசியில நோ ரிசல்ட்.. வெளியேறிய கோலி படை

பெங்களூரு: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான போட்டி மழையால் கைவிடப் பட்டதால் தொடரில் இருந்து வெளியேறியது பெங்களூரு.

ஐபிஎல் தொடரின் 49 வது போட்டியானது பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டி, பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. அதன்படி, முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்து வீச முடிவு செய்தார்.

1
45925

ஆனால், பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு பலத்த மழை கொட்டியது. அதனால், போட்டி அறிவிக்கப்பட்ட குறித்த நேரத்தில் தொடங்கப்படவில்லை.

கள ஆய்வு

கள ஆய்வு

மழை நீடித்தால் இந்த போட்டி கைவிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. மைதானம் ஆடுவதற்கு ஏற்றதாக இருக்கிறதா என்று பல முறை நடுவர்கள் கள ஆய்வு செய்தனர்.

போட்டி தொடங்கியது

போட்டி தொடங்கியது

இதையடுத்து இரவு 11.26 மணிக்கு தொடங்கும் ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. அதன் படி, போட்டி தொடங்கியது. மழை பலமுறை குறுக்கிட்டதால்.... போட்டியானது 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது.

ராஜஸ்தான் பவுலிங்

ராஜஸ்தான் பவுலிங்

அதாவது ஒவ்வொரு அணியும் தலா 5 ஓவர்கள் மட்டுமே விளையாட வேண்டும் என்பதாகும். அதன்படி டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது.

மாறிய ஜோடி

மாறிய ஜோடி

இதையடுத்து முதலில் பெங்களூரு அணி பேட் செய்தது. வழக்கமாக தொடக்க வீரர்களாக பார்த்தீவும், கோலியும் களம் இறங்குவர். ஆனால் மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டதால், கோலியும் டி வில்லியர்சும் களம் கண்டனர்.

2 பந்துகளில் சிக்ஸ்

2 பந்துகளில் சிக்ஸ்

முதல் ஓவரை கோலி எதிர்கொண்டார். 2 பந்துகளும் சிக்சர்களுக்கு பறந்தன. அந்த ஓவரில் பெங்களூரு அணி அருமையாக ஆடியது. 5 ஓவர்களிலும் இதேபோன்று விளையாடினால் 75 ரன்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஹாட்ரிக் விக்கெட்

ஹாட்ரிக் விக்கெட்

ஆனால்.. 2வது ஓவரில் கோலி ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த பந்தில் டி வில்லியர்சும், ஸ்டோய்னிசும் தொடர்ந்து ஆட்டமிழந்தனர். அந்த ஓவரை வீசிய ஸ்ரேயாஸ் கோபால் ஹாட்ரிக் எடுத்து பெங்களூரை திணறடித்தார்.

62 ரன்கள் குவிப்பு

62 ரன்கள் குவிப்பு

கோலி அமைத்து கொடுத்த தொடக்கத்தை மற்ற வீரர்கள் பின்பற்றவில்லை. முடிவில் குறைக்கப்பட்ட 5 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் எடுத்தது.

கலக்கிய சாம்சன்

கலக்கிய சாம்சன்

63 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் ராஜஸ்தான் களம் இறங்கியது. சஞ்சு சாம்சனும், லிவிங்ஸ்டனும் ஆட்டத்தை துவக்கினர். சஞ்சு சாம்சன் பெங்களூரு பந்துகளை பதம்பார்த்தார்.

ஆளுக்கு ஒரு புள்ளி

ஆளுக்கு ஒரு புள்ளி

ஸ்கோர் 41 ரன்களாக இருந்த போது சாம்சன் ஆட்டமிழந்தார். அப்போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு, 2 அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. போட்டியின் முடிவையடுத்து, ஐபிஎல் தொடரில் இருந்து பெங்களூரு வெளியேறியது.

Story first published: Wednesday, May 1, 2019, 1:14 [IST]
Other articles published on May 1, 2019
English summary
Heavy Rain stopped the play between rajasthan royals and royal challengers Bangalore and then called off.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X