For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடுத்தடுத்து மாஸ் முடிவுகள்.. புதுப்பொலிவோடு இறங்குகிறது.. 2021 ஐபிஎல்லில் இந்த அணி கப் அடிச்சிடுமோ?

சிட்னி: 2021 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ராஜஸ்தான் அணி வரிசையாக பல அதிரடி முடிவுகளை எடுத்து வருவது ஆச்சர்யம் அளித்துள்ளது.

2020 ஐபிஎல் தொடரில் நல்ல வீரர்களை கொண்டு இருந்தும் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தது. இங்கிலாந்து வீரர்கள் சிலர் தாமதமாக அணிக்குள் வந்தது, ஸ்டீவ் ஸ்மித்தின் மோசமான ஆட்டம் என்று ராஜஸ்தான் அணி தொடர்ந்து சொதப்பியது.

தொடரின் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தினாலும் போக போக ராஜஸ்தான் அணி மோசமாக ஆடி மண்ணை கவ்வியது.

எப்படி

எப்படி

இந்த நிலையில் 2021 ஐபிஎல் தொடரில் எப்படியாவது கோப்பை அடிக்க வேண்டும் என்பதில் ராஜஸ்தான் அணி உறுதியாக உள்ளது. இதனால் பெரிய அளவில் ரிஸ்க் எடுக்கவும், அதிரடி முடிவுகளை எடுக்கவும் ராஜஸ்தான் அணி தயாராகிவிட்டது. ராஜஸ்தான் அணியில் இதனால் அடுத்தடுத்து மாற்றங்கள் நடந்து வருகிறது.

ராஜஸ்தான் மாற்றம்

ராஜஸ்தான் மாற்றம்

அதன்படி முதல் கட்டமாக ராஜஸ்தான் அணியில் இருந்து ஆஸ்திரேலிய வீரர்களின் ஆதிக்கம் குறைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் அணியின் ஆலோசகராக இனி ஷேன் வார்னே தொடர மாட்டார் என்று கூறப்படுகிறது. இத்தனை வருடம் ராஜஸ்தான் அணியில் வார்னே முக்கியமான வீரராக இருந்து வந்தார்.

மாற்றம்

மாற்றம்

இதனால்தான் அந்த அணியின் இயக்குனராக தற்போது சங்ககரா நியமிக்கப்பட்டு உள்ளார். இதனால் மும்பை அணியை போல ராஜஸ்தான் அணியின் முன்னாள் இலங்கை வீரர்களை வைத்து செயல்படும் என்று கூறுகிறார்கள். இது மிகவும் அதிரடியான முடிவாக பார்க்கப்படுகிறது.

அதிரடி முடிவு

அதிரடி முடிவு

அதேபோல் ராஜஸ்தான் அணி அதிரடியாக தங்கள் கேப்டன் ஸ்மித்தையே அணியில் இருந்து நீக்கி உள்ளது. இது இன்னொரு துணிச்சலான முடிவாகும். இதன் மூலம் புதிய கேப்டனாக சஞ்சு சாம்சன் தேர்வாகி உள்ளார். இந்திய இளம் வீரரை கேப்டனாக நியமித்து ராஜஸ்தான் கலக்கி உள்ளது.

ராபின் உத்தப்பா

ராபின் உத்தப்பா

இதெல்லாம் போக ராபின் உத்தப்பா போன்ற பார்மில் இல்லாத மூத்த வீரர்களை அணியில் இருந்து நீக்கி ராஜஸ்தான அடுத்தடுத்து துணிச்சலான முடிவுகளை எடுத்து வருகிறது. இதனால் அந்த அணி ஓப்பனிங்கில் இறக்க புதிய வீரரை கொண்டு வரும்.

திட்டம்

திட்டம்

மும்பை அணியின் திட்டங்களை பின்பற்றி தற்போது ராஜஸ்தான் செயல்பட்டு வருகிறது. 2021ல் கோப்பையை வென்றுவிடுமோ என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு ராஜஸ்தான் அணி அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது.மினி ஏலத்தில் ராஜஸ்தான் யாரை எல்லாம் எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது.

Story first published: Friday, January 22, 2021, 12:10 [IST]
Other articles published on Jan 22, 2021
English summary
Rajasthan taking a brave decision like Mumbai Indians ahead of IPL 2021 mini auction.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X