பெரிய டீம்ன்னா பயப்படணுமா?.. ரசிகர்கள் வெறுத்துடுவாங்க - பாக்., அணியை வெளுக்கும் சீனியர்ஸ்

ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான பாகிஸ்தானின் டெஸ்ட் தொடரை கடுமையாக விமர்சித்துள்ளனர் அந்நாட்டின் முன்னாள் வீரர்கள் சிலர். சுவாரசியமில்லாத அத்தொடர் ஏன் நடத்தப்பட்டது? என்பதே அவர்கள் கேள்வி.

ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் செய்த பாகிஸ்தான், அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. "என்னது இப்படியொரு சீரிஸ் நடந்துச்சா?"-னு ஜெர்க் ஆகக் கூடாது. நடந்துச்சு!.

இதில், 2-1 என்று டி20 தொடரையும், டெஸ்ட் தொடரை 2-0 என்றும் பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது. ஆனால், இந்த வெற்றியை கொண்டாடும் மனநிலையில் பாகிஸ்தான் ரசிகர்கள் உள்ளனரா? என்றால் அது கேள்விக்குறியே. சரிசமம் இல்லாத அணிகள்.. துளி சுவாரஸ்யம் இல்லாத சீரிஸ்.. ஒன் சைட் ரிசல்ட்.. என்று இந்த தொடர் பிலோ ஆவரேஜுக்கும் பிலோ-வாக செல்ல, போட்டு வறுத்தெடுத்திருக்கிறார் ரமீஸ் ராஜா.

ஒன்லி டாமினேஷன்

ஒன்லி டாமினேஷன்

இது குறித்து தனது யூடியூப் சேனலில் பேசியுள்ள ரமீஸ் ராஜா, "இதுபோன்ற ஒருதலைப்பட்சமான முடிவுகள் கொண்ட தொடர்கள் சிறந்த நகைச்சுவையாகும். இது ரசிகர்களை கிரிக்கெட்டை விடுத்து வெவ்வேறு விளையாட்டுகளை பார்க்க வைத்துவிடும். ஒரு சாதாரண அணி, பலம் பொருந்திய அணியுடன் மோதும் போது, போட்டியின் முடிவை விட, அந்த சாதாரண அணி என்ன கற்றுக் கொண்டது என்பதைத் தான் பார்க்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், என்னைப் பொறுத்தவரை, இந்தத் தொடரில் அப்படி ஜிம்பாப்வே அணி, பாகிஸ்தானால் தொடர்ந்து டாமினேட் செய்யப்பட்டதே தவிர, புதிதாக எதையும் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை" என்றார்.

பயப்படக் கூடாது

பயப்படக் கூடாது

இதே கருத்தை வலியுறுத்திய பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரஷீத் லத்தீஃப், "இந்த தொடர் எதற்காக நடத்தப்பட்டது? நோக்கம் என்ன? பாகிஸ்தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது நல்லது. ஆனால் எதிர்காலத்தில் பாகிஸ்தான் வலுவான அணிகளுக்கு எதிராக விளையாட வேண்டும். அவர்களுடன் விளையாட பயப்படக் கூடாது. நாம் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துடன் விளையாடும் போது, டெஸ்ட் போட்டிகளை அதிகரியுங்கள். ஏனென்றால், இந்த அணிகளுடன் விளையாடுவதை மக்கள் விரும்புகிறார்கள். போட்டிகளில் வெற்றி பெறுவது, தோல்வி அடைவது பற்றி கவலைப்பட வேண்டாம். நாம் ஏற்கனவே இந்தியாவுக்கு எதிராகவும் விளையாடுவதில்லை. ஆகையால், மீதமிருக்கும் ஐந்தாறு பலமான அணிகளுடனாவது நாம் விளையாட வேண்டும்" என்றார்.

அதுக்கு பதில் என்ன?

அதுக்கு பதில் என்ன?

ஆனால், இதில் ஒரு ரசிகனாக நாம் பார்க்கு விஷயம் என்னவெனில், இந்த ஜிம்பாப்வே சீரிஸில் கூட, ஒரு டி20 போட்டியில் பாகிஸ்தான் தோற்றிருக்கிறது. பலம் குறைந்த அணியுடன் ஏன் விளையாட வேண்டும்? என்று கேள்வி எழுப்பும் ரமீஸ் ராஜா, பாகிஸ்தானின் இந்த தோல்வி குறித்தும் பேசியிருந்தால் மேட்சிங் கரெக்ட்டாக இருந்திருக்கும்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

அதுமட்டுமல்ல.. சமீபத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும், ஒரு டி20 போட்டியில் பாகிஸ்தான் தோற்றிருந்தது. அந்த போட்டியில், 90% புதிய வீரர்களை கொண்டு விளையாடிய தென்னாப்பிரிக்காவுடன் பலம் வாய்ந்த பாகிஸ்தான் தோற்றது. இப்போது ஜிம்பாப்வுடனும் தோற்றிருக்கிறது. டி20 உலகக் கோப்பை நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், பாகிஸ்தான் தனது டி20 அணியில் மேற்கொள்ள வேண்டிய சீர் நடவடிக்கைகளை இன்னும் உள்ளன. அதற்கு ஜிம்பாப்வே சீரிஸும் ஒரு உதவியாக பாகிஸ்தானுக்கு அமைந்தது என்பதே உண்மை!.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Ramiz Raja criticized Pak Test Series vs Zim ​- பாகிஸ்தான்
Story first published: Tuesday, May 11, 2021, 10:22 [IST]
Other articles published on May 11, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X