For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“பாகிஸ்தானை பார்த்து காப்பி அடிக்கிறாங்க” ஹர்திக்கின் கேப்டன்சி.. ரமீஸ் ராஜா சுவாரஸ்ய கருத்து!

லாகூர்: பாகிஸ்தான் அணியை பார்த்து இந்திய கிரிக்கெட் அணி தனது திட்டங்களையும், கட்டமைப்பையும் காப்பி அடித்துக்கொண்டதாக அந்நாட்டு முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா கூறியுள்ளார்.

இந்திய அணி தற்போது நியூசிலாந்துடனான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில் இந்தியாவின் பேட்டிங் மட்டுமின்றி, ஃபீல்டிங் மற்றும் பவுலிங் ஆகியவையும் மிகச்சிறப்பாக மாறியிருந்தது.

குறிப்பாக அகமதாபாத்தில் நடைபெற்ற 3வது டி20 போட்டியில் 234 ரன்களை குவித்த இந்திய அணி, நியூசிலாந்தை வெறும் 66 ரன்களுக்குள் சுருட்டியது. கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

வீசி எறியப்பட்ட ஜெர்ஸி.. அம்பயரே கோபத்தில் கொந்தளிப்பு.. பாகிஸ்தான் போட்டியில் பரபர சம்பவம்- விவரம் வீசி எறியப்பட்ட ஜெர்ஸி.. அம்பயரே கோபத்தில் கொந்தளிப்பு.. பாகிஸ்தான் போட்டியில் பரபர சம்பவம்- விவரம்

டி20 படை

டி20 படை

2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இளம் வீரர்களை கொண்ட படையை பிசிசிஐ உருவாக்கியுள்ளது. அதனை வழிநடத்தும் பொறுப்பை தான் ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக செய்து வருகிறார். அவரின் கீழ் உம்ரான் மாலிக், ஷிவம் மாவி, அர்ஷ்தீப் சிங், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் போன்ற இளம் வீரர்கள் மிகச்சிறப்பாக தயாராகி வருகின்றனர்.

பாக். ஃபார்முலா

பாக். ஃபார்முலா

இந்நிலையில் பாண்ட்யா பாகிஸ்தானை காப்பி அடிப்பதாக ரமீஸ் ராஜா கூறியுள்ளார். இந்திய அணியானது பாகிஸ்தானின் கட்டமைப்பை பார்த்து தங்களது பவுலிங்கை மாற்றியதாக தெரிகிறது. ஹாரிஸ் ராஃப் போன்ற அதிவேகத்தை கொடுக்க உம்ரான் கானை வைத்துள்ளனர். சாஹீன் அஃப்ரிடி இடதுகையில் ஆர்ம் ஆங்கிள் பவுலர் ஆகும். அந்த பணியை அர்ஷ்தீப் சிங் வைத்துள்ளார்.

ஹர்திக் பாண்ட்யா

ஹர்திக் பாண்ட்யா

பாகிஸ்தான் அணியின் மிடில் ஓவர்களில் ஜூனியர் வசீம் வீசுவார். இந்திய அணியில் அந்த பணியை ஹர்திக் பாண்ட்யா செய்து வருகிறார். அவர்கள் இருவருமே ஒரே மாதிரியான வேகத்தில் வீசக்கூடியவர் . ஷிவம் மாவி கூடுதல் பலத்தை சேர்த்துள்ளார். இதனால் தான் பாகிஸ்தானை பார்த்து உருவாக்கியுள்ளனர் எனக்கூறுகிறேன்.

சுழற்பந்துவீச்சு

சுழற்பந்துவீச்சு

இந்தியாவின் சுழற்பந்துவீச்சை பொறுத்தவரையில் பாகிஸ்தானை விட சிறப்பானது தான். இரு அணிகளும் விளையாடும் போதெல்லாம் பாகிஸ்தானின் ஸ்பின்னர்கள், இந்தியாவை போல சிறப்பாக செயல்பட்டிருக்கலாமோ என்று நினைப்பேன் என ரமீஸ் ராஜா கூறியுள்ளார். இந்திய அணி அடுத்ததாக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மட்டும் கவனம் செலுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, February 3, 2023, 14:58 [IST]
Other articles published on Feb 3, 2023
English summary
Former Pakistan Cricketer Ramiz raja feels Team India copying tha Pakistan's bowling design, here is the reason why?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X