For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மண்ணின் மைந்தன் தோனி… அரங்கமே அதிர உற்சாக வரவேற்பளித்த சொந்த ஊர் ரசிகர்கள்! வீடியோ

ராஞ்சி: ராஞ்சி போட்டியில் தோனி பெவிலியனில் இருந்து மைதானத்திற்கு வரும்போது அரங்கமே அதிரும் அளவிற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்த விடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சீனியர் வீரருமான தோனி, இந்த உலக கோப்பையுடன் ஓய்வுபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2004ம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்காக அவர் ஆடிவருகிறார்.

2007ம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். அந்த ஆண்டில் டி20 உலக கோப்பை, 2011ல் ஒருநாள் உலக கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி என அனைத்து வகையான சர்வதேச கோப்பைகளையும் இந்திய அணிக்கு வென்று கொடுத்தார்.

தல தோனியை உட்கார வைக்க கோலி சொன்னாரா...? வெடித்தது சர்ச்சைதல தோனியை உட்கார வைக்க கோலி சொன்னாரா...? வெடித்தது சர்ச்சை

அணியின் வீரர்

அணியின் வீரர்

அதன் பின்னர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி.. தோனி, அணியில் ஒரு வீரராக களமாடி வருகிறார். கேப்டன் பதவியில் இல்லை என்றாலும், கேப்டன் கோலி, தோனியின் ஆலோசனைகளை கேட்கிறார்.

ஓய்வுக்கான வாய்ப்பு

ஓய்வுக்கான வாய்ப்பு

இந்த உலக கோப்பையுடன் தோனி ஓய்வுபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே அவரது சொந்த ஊரான ராஞ்சியில் நேற்று ஆடிய போட்டிதான் அவரது கடைசி போட்டியாக இருக்கும்.

பெயர் சூட்டல்

பெயர் சூட்டல்

அந்த வகையில், ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் பெவிலியனுக்கு தோனியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது.

ரன் அவுட்

ரன் அவுட்

மேக்ஸ்வெல்லை வழக்கம்போல தனது சமயோசித புத்தியால் அபாரமாக ரன் அவுட் செய்தார் தோனி. 314 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி தோல்வி அடைந்தது.

வரவேற்பு

3 விக்கெட்டுகளுக்கு பிறகு களத்திற்கு வந்தார் தோனி. தோனி பெவிலியனில் இருந்து மைதானத்திற்கு வரும்போது ராஞ்சி ரசிகர்கள், அரங்கமே அதிரும் அளவிற்கு உற்சாக வரவேற்பளித்தனர். அந்த வீடியோவை பிசிசிஐ டுவிட்டரில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.

Story first published: Saturday, March 9, 2019, 13:05 [IST]
Other articles published on Mar 9, 2019
English summary
Ranchi fans thunderous welcome to dhoni in home ground.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X