For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரஞ்சி கோப்பையில் புதிய வரலாறு.. 41 முறை சாம்பியன் மும்பை தோல்வி.. 23 ஆண்டுகள் ம.பி அணியின் கனவு கதை

பெங்களூரு: ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை அணியும், மத்திய பிரதேச அணியும் மோதியது.

இதில், டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கேப்டன் பிரித்வி ஷா பொறுமையாக விளையாடி 47 ரன்கள் சேர்த்தார்.

மற்றொரு தொடக்க வீரர் ஜெய்ஷ்வால் நிதானமாக விளையாடி 78 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

ரஞ்சி கோப்பையில் ஜெய்ஷவால் சாதனை.. சச்சின், ரோகித் வரிசையில் இடம்பிடித்தார்.. மும்பை அபாரம்ரஞ்சி கோப்பையில் ஜெய்ஷவால் சாதனை.. சச்சின், ரோகித் வரிசையில் இடம்பிடித்தார்.. மும்பை அபாரம்

536 ரன்கள்

536 ரன்கள்

நடுவரிசையில் நட்சத்திர வீரர் சர்பிராஸ் கான் 134 ரன்கள் விளாச மும்பை அணி முதல் இன்னிங்சில் 374 ரன்களை அடித்தது. இதனையடுத்து மத்திய பிரேதச அணியின் தொடக்க வீரர் யாஷ் துபே, சுபம் சர்மா மற்றும் ரஜத் பட்டிதார் ஆகியோர் சதம் விளாசினர். இதன் மூலம் மத்திய பிரதசே அணி முதல் இன்னிங்சில் 536 ரன்கள் எடுத்தது.

மும்பை 2வது இன்னிங்ஸ்

மும்பை 2வது இன்னிங்ஸ்

162 ரன்கள் பின்தங்கிய மும்பை அணி, 2வது இன்னிங்சில் களமிறங்கியது. கேப்டன் பிரித்வி ஷா 44 ரன்கள் எடுக்க, ஹர்திக் தாமுர் 25 ரன்கள் சேர்த்தார். அர்மான் ஜாபர் அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்தார். சூவேத் பார்கர் அரைசதம் எடுக்க, சர்பிராஸ் கான் 45 ரன்கள் சேர்த்தார். மும்பை அணி 2வது இன்னிங்சில் 269 ரன்கள் எடுத்தது.

108 ரன்கள் இலக்கு

108 ரன்கள் இலக்கு

இதனையடுத்து 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மத்திய பிரதேச அணி களமிறங்கியது. ஹிமான்சு மந்திரி 37 ரன்களும், சுபாம் சர்மா 30 ரன்களும், ரஜத் பட்டிதார் 30 ரன்களும் எடுக்க, மத்திய பிரதேச அணி 4 விக்கெட் இழப்பிற்கு 29.5வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் மத்திய பிரதேச அணி வென்றது.

23 ஆண்டுகள் கனவு

23 ஆண்டுகள் கனவு

ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதல் முறையாக மத்திய பிரதேச அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 23 ஆண்டுகளுக்கு முன்பு இதே பெங்களூருவில் ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் மத்திய பிரதேச அணியும், கர்நாடக அணியும் மோதின. அப்போது மத்திய பிரதேசம் தோல்வியை தழுவியது. அப்போது கேப்டனாக சந்திரகாந்த் பண்டிட் கண்ணீர் விட்டு சென்றார். தற்போது ம.பி அணியின் பயிற்சியாளராக தாம் விட்ட கனவை தற்போது நிறைவேற்றியுள்ளார்.

Story first published: Sunday, June 26, 2022, 20:57 [IST]
Other articles published on Jun 26, 2022
English summary
Ranji trophy 2022 – Madhya Pradesh is the new champion ரஞ்சி கோப்பையில் புதிய வரலாறு.. 41 முறை சாம்பியன் மும்பை தோல்வி.. 23 ஆண்டுகள் ம.பி அணியின் சாதனை கதை
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X