For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கெத்தாக திரும்பிய ரஹானே..!! எதிர்த்தவர்கள் வாயை மூட வைத்தார்..!! விரைவில் புதிய பொறுப்பு..

அகமதாபாத்: இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானே, கடந்த சில மாதங்களாக ரசிகர்கள் கையில் சிக்கி படாத பாடு பட்டார்.

இந்திய அணியின் கேப்டனாக, துணை கேப்டனாக இருந்த ரஹானே ஒரு கட்டத்தில் அணியில் இடம் கிடைக்குமா என்ற லெவலுக்கு சென்றது.

இதற்கு காரணம் ரஹானே தனது ஃபார்மை இழந்து தடுமாறியது தான். ரஹானேவால் தான் இந்தியா தோற்கிறது என்று ரசிகர்களும் குற்றஞ்சாட்டினர்.

இந்திய அணியில் இடம் வேண்டுமா? கண்டிப்பா இதை செய்தால் கிடைக்கும்.. இளம் வீரருக்கு ரோகித் கண்டிஷன்இந்திய அணியில் இடம் வேண்டுமா? கண்டிப்பா இதை செய்தால் கிடைக்கும்.. இளம் வீரருக்கு ரோகித் கண்டிஷன்

2020 முதல் ரஹானே

2020 முதல் ரஹானே

அதற்கு காரணம், ரஹானே கடைசியாக சதம் அடித்தது டிசம்பர் 2020ஆம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற டெஸ்டில் தான். ரஹானே கடந்த 27 இன்னிங்சில் 547 ரன்களே அடித்துள்ளார்.. இதில் சராசரியாக அவர் 20 ரன்கள் மட்டுமே அடித்தார். இதில் 3 அரைசதம் மட்டுமே அடங்கும்.இந்த கால கட்டத்தில் ரஹானேவின் ஒட்டுமொத்த சராசரி 43 இல்லிருந்து 39ஆக குறைந்தது.

மும்பை தடுமாற்றம்

மும்பை தடுமாற்றம்

ரஹானே தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு ரஞ்சி கோப்பையில் மும்பை அணிக்காக பிரித்வி ஷா தலைமையில் இன்று களமிறங்கினார். அகமதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. கேப்டன் பிரித்வி ஷா 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.கோமேல் 8 ரன்களில் வெளியேறினார்.

ரஹானே சதம்

ரஹானே சதம்

இதனையடுத்து, அனுபவ வீரர் ரஹானே மற்றும் சர்பிராஸ் கான் ஆகியோர் ஜோடி சேர்ந்து பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பொறுப்பாக விளையாடிய ரஹானே, தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 211 பந்துகளை எதிர்கொண்ட ரஹானே, 2 ஆண்டுகளுக்கு பிறகு சதம் விளாசினார். இதில் 14 பவுண்டரிகளும், 2 சதமும் அடங்கும்.

புதிய பொறுப்பு

புதிய பொறுப்பு

இதன் மூலம் ரஹானே ஃபார்ம்க்கு திரும்பியதால், இலங்கைக்கு எதிரான தொடரில் ரஹானே இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்திய அணியில் துணை கேப்டன் அல்லது கேப்டன் பொறுப்பு ரஹானேவுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது இதே போட்டியில் சௌராஷ்டிரா அணியில் புஜாரா இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, February 17, 2022, 18:45 [IST]
Other articles published on Feb 17, 2022
English summary
Ranji trophy 2022 Rahane scored century vs sausrastra in opening match கெத்தாக திரும்பிய ரஹானே..!! எதிர்த்தவர்கள் வாயை மூட வைத்தார்..!! விரைவில் புதிய பொறுப்பு..
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X