இந்திய அணியில் வாய்ப்பு மறுப்பு.. சதம் அடித்துவிட்டு அசிங்கம் அசிங்கமாக திட்டிய சர்ஃபிராஸ் கான்

மும்பை: ரஞ்சி கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் மும்பை அணிக்காக விளையாடும் சர்பிராஸ் கான் சதம் விளாசியுள்ளார்.

மத்திய பிரதேசம் அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் ஆட்டத்தில் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது.

“ஒரு வெற்றி கூட இல்லை“ .. ராகுல் டிராவிட்-க்கு வந்த சோதனை.. இந்தியாவுக்கு இன்னும் 3 வாய்ப்பு தான்! “ஒரு வெற்றி கூட இல்லை“ .. ராகுல் டிராவிட்-க்கு வந்த சோதனை.. இந்தியாவுக்கு இன்னும் 3 வாய்ப்பு தான்!

இதில் மும்பை அணிக்காக விளையாடி வரும் சர்ஃபிராஸ் கான், வழக்கம் போல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அசத்தல் ரெக்காட்

அசத்தல் ரெக்காட்

பள்ளி கிரிக்கெட்டில் சச்சின் சாதனையை முறியடித்து அறியப்பட்ட சர்பிராஸ் கான், அண்டர் 19 கிரிக்கெட்டில் தனது திறமையை வெளிப்படுத்தினார். 2020ஆம் ஆண்டுக்கு பிறகு ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் சர்ஃபிராஸ் கான் 6 சதங்கள் அடித்துள்ளார். இந்த 6 சதங்களுமே 150 ரன்களுக்கு மேல் அடிக்க பட்டவை. இதில் 2 இரட்டை சதமும், ஒரு முச்சதமும் அடங்கும்.

சாதனை பயணம்

சாதனை பயணம்

2020 ஆண்டுக்கு பிறகு ரஞ்சி கிரிக்கெட்டில் சர்ஃபிராஸ் அடித்த ரன்கள் பின்வருமாறு கர்நாடகாவிற்கு எதிராக 8, 71* தமிழ்நாடுக்கு எதிராக 36 ரன்கள், உபிக்கு எதிராக 301* ரன்கள், ஹிம்மாச்சலுக்கு எதிராக 226• ரன்கள், சௌராஸ்டிராக்கு எதிராக 78, 25 ரன்கள், மத்திய பிரதேசத்துக்கு எதிராக 177, 6 ரன்கள், சௌராஷ்டிராக்கு எதிராக 275 ரன்கள், கோவாக்கு எதிராக 63,48 ரன்கள் ஓடிசாக்கு எதிராக 165 ரன்கள், உத்தரக்கண்ட்க்கு எதிராக 153 ரன்கள் அடித்துள்ளார்.

மீண்டும் சதம்

மீண்டும் சதம்

தொடர்ந்து ரஞ்சி கிரிக்கெட்டில் அதிரடி காட்டும் சர்பிராஸ் கான், இதுவரை இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில், ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் பிரித்வி ஷா 47 ரன்களும், ஜெய்ஷ்வால் 78 ரன்களும் அடிக்க, நடுவரிசையில் களமிறங்கிய சர்பிராஸ் கான். சதம் விளாசி அசத்தினார். சதத்தை நிறைவு செய்துவிட்டு அவர் ஆக்கோரஷமாக டிரஸிங் ரூம்மை பார்த்து கத்தினார். பிறகு ஏதோ சில வார்த்தைகளை அவர் பயன்படுத்தினார்.

மத்திய பிரதேசம் பதிலடி

தொடர்ந்து 134 ரன்களுக்கு சர்பிராஸ் ஆட்டமிழந்தார். இதில் 2 சிக்சர்களும், 13 பவுண்டரிகளும் அடங்கும். இதனையடுத்து மும்பை அணி முதல் இன்னிங்சில் 374 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, மத்திய பிரதேசம் தற்போது முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது. 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் மகாராஷ்டிரா அணி 123 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Ranji trophy final 2022 - Sarfaraz khan terrific century vs MP ரஞ்சி கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் மும்பை அணிக்காக விளையாடும் சர்பிராஸ் கான் சதம் விளாசியுள்ளார்.
Story first published: Thursday, June 23, 2022, 17:23 [IST]
Other articles published on Jun 23, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X