For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

புஜாரா 2 முறை அவுட் ஆகி வெளியேறாமல் ஏமாற்றினாரா? ரசிகர்கள் கூச்சல்.. அரையிறுதியில் பரபரப்பு

Recommended Video

புஜாரா 2 முறை அவுட் ஆகி வெளியேறாமல் ஏமாற்றினாரா?.. ரசிகர்கள் கூச்சல்- வீடியோ

பெங்களூரு : இந்திய உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் முன்னணி வீரர் புஜாரா கேட்ச் கொடுத்தும், அம்பயர் முடிவை சாதகமாக பயன்படுத்தி தொடர்ந்து பேட்டிங் செய்தது சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.

ரஞ்சி தொடரின் இரண்டாவது அரையிறுதியில் சௌராஷ்டிரா மற்றும் கர்நாடகா அணிகள் மோதின. இந்த போட்டியில் தான் சர்ச்சை வெடித்துள்ளது.

அம்பயரால் தப்பித்த புஜாரா

அம்பயரால் தப்பித்த புஜாரா

மிகவும் முக்கிய போட்டியான இந்த அரையிறுதியில் இரண்டு முறை அம்பயர் முடிவால் புஜாரா தப்பித்தார். எனினும், கர்நாடகா ரசிகர்கள் புஜாரா நியாயமாக அவுட் என தெரிந்த பின் தாமாகவே வெளியேறி இருக்க வேண்டும். ஆனால், அம்பயர் முடிவை சாதகமாக்கி தொடர்ந்து பேட்டிங் செய்தது தவறு என கூறி கூச்சலிட்டனர்.

முதல் இன்னிங்க்ஸ் நிகழ்வு

இந்த அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா 275 ரன்கள் எடுத்தது. அடுத்து தன் முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்கை ஆடிய சௌராஷ்டிரா அணியில் புஜாரா 2 ரன்கள் இருந்த போது அபிமன்யு மிதுன் பந்துவீச்சில் எட்ஜ் ஆகி, விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார்.

சலசலப்பு எழுந்தது

சலசலப்பு எழுந்தது

ஆனால், அம்பயர் இதற்கு அவுட் கொடுக்க மறுக்கவே புஜாரா தொடர்ந்து பேட்டிங் செய்தார். ரீப்ளேவில் மிக தெளிவாக பந்து எட்ஜ் ஆனது தெரிந்தது. எனினும், புஜாரா நியாயமாக தாமாக வெளியேறாமல் இருந்தது சலசலப்பை உண்டாக்கியது.

சௌராஷ்டிராவுக்கு 279 ரன்கள் இலக்கு

சௌராஷ்டிராவுக்கு 279 ரன்கள் இலக்கு

சௌராஷ்டிரா தன் முதல் இன்னிங்க்ஸில் 236 ரன்கள் எடுத்தது. புஜாரா 45 ரன்கள் அடித்தார். அடுத்து கர்நாடகா தன் இரண்டாம் இன்னிங்க்ஸில் 239 ரன்கள் எடுத்து, சௌராஷ்டிரா அணிக்கு 279 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

இரண்டாம் இன்னிங்க்ஸ் நிகழ்வு

இரண்டாம் இன்னிங்க்ஸில் புஜாரா 34 ரன்கள் இருந்த போது வினய்குமார் பந்துவீச்சில் முதல் இன்னிங்க்ஸ் போலவே எட்ஜ் ஆகி, விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். இப்போதும் அம்பயர் அவுட் கொடுக்க மறுக்கவே, கர்நாடகா வீரர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

49வது சதம்

49வது சதம்

புஜாரா இந்த முறையும் தாமாக வெளியேறவில்லை. தொடர்ந்து பேட்டிங் செய்த அவர் அணியை வெற்றி பெறச் செய்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 131 ரன்கள் அடித்தார். அவரது இந்த சதம் முதல் தர போட்டிகளில் 49வது ஆகும்.

சிறிய பரபரப்பு நிலவியது

சௌராஷ்டிரா அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதை அடுத்து, கர்நாடகா ரசிகர்கள் புஜாராவை நோக்கி ஏமாற்றுக்காரர் என கூச்சலிட்டதால் சிறிய பரபரப்பு நிலவியது.

Story first published: Tuesday, January 29, 2019, 12:13 [IST]
Other articles published on Jan 29, 2019
English summary
Ranji trophy Semi final created a controversy after Pujara failed to walk out, despite he edged the ball twice.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X