For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேப்டனும் சாஹாவும் சிறப்பான துவக்கத்தை கொடுத்திருக்காங்க... நம்பிக்கை தாறுமாறா எகிறியிருக்கு!

ஷார்ஜா : நேற்றைய போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி கொண்டுள்ளது.

இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் நட்சத்திர பௌலர் ரஷீத் கான் ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் இந்த வெற்றி தங்களது தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளதாக ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.

இது மட்டும் நடக்காம இருந்திருந்தா.. டீமை விட்டே தூக்கி இருப்பார் கோலி.. தப்பிய துணை கேப்டன்!இது மட்டும் நடக்காம இருந்திருந்தா.. டீமை விட்டே தூக்கி இருப்பார் கோலி.. தப்பிய துணை கேப்டன்!

பிளே-ஆப்பிற்கு சன்ரைசர்ஸ் தகுதி

பிளே-ஆப்பிற்கு சன்ரைசர்ஸ் தகுதி

நேற்றைய ஐபிஎல் 2020 இறுதி லீக் போட்டி சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற நிலையில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி கொண்டுள்ளது. இதையடுத்து பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது சன்ரைசர்ஸ்.

வெற்றி குறித்து ரஷீத் கான் மகிழ்ச்சி

வெற்றி குறித்து ரஷீத் கான் மகிழ்ச்சி

இந்நிலையில் இந்த வெற்றி தங்களது தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளதாக சன்ரைசர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரஷீத் கான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் விரித்திமான் சாஹா இருவரும் விக்கெட்டுகள் இழப்பின்றி மும்பை இந்தியன்சின் 150 இலக்கை முடித்தனர்.

பதட்டமற்ற ஆட்டம்

பதட்டமற்ற ஆட்டம்

இந்நிலையில் திட்டமிட்டு இரண்டு பேட்ஸ்மேன்களும் அணிக்கு சிறப்பாக வெற்றித் துவக்கத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக ரஷீத் கான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். எந்த பதட்டமும் இன்றி விக்கெட்டுகள் இழப்பின்றி அவர்கள் இருவரும் விளையாடியது சிறப்பானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விளையாட ஆர்வம்

விளையாட ஆர்வம்

ஐபிஎல் டி20 இணையதளத்திற்காக அணி வீரர் சந்தீப் சர்மாவிடம் பேசிய ரஷீத் கான், இந்த தன்னம்பிக்கையுடன் ஆர்சிபி உடனான போட்டியில் விளையாட ஆவலுடன் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். நாளை மறுதினம் நடைபெறவுள்ள எலிமினேட்டர் சுற்றில் ஆர்சிபியை சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, November 4, 2020, 20:38 [IST]
Other articles published on Nov 4, 2020
English summary
SRH will face off against Royal Challengers Bangalore in the eliminator
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X