For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

VIDEO: முறைச்சா விட்ருவோமா? வம்பிழுத்த ரஷித்துக்கு பேட்டால் பதில் சொன்ன வாட்சன்... கலக்கல் மேட்ச்

Recommended Video

Chennai vs Hyderabad: பல அணிகள்,இந்நேரத்திற்கு என்னை நீக்கிஇருப்பார்கள் : உருகிய வீரர்!- வீடியோ

சென்னை:சென்னைக்கு எதிரான போட்டியில் பந்துவீசும் போது முறைப்பு காட்டிய ரஷித் கானுக்கு தமது பேட்டால் வாட்சன் பதில் சொன்ன வீடியோ தான் இப்போ ஹைலைட்.

ஐபிஎல் சீசனில் வழக்கம் போல அதிரடி காட்டி வரும் சென்னை அணி ஜம்மென்று 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் நிலையில் இருக்கின்றன. இருக்கும் ஒரேயொரு இடத்துக்கு பஞ்சாப், சன் ரைசர்ஸ் இடையே கடும் போட்டி ஏற்படும் என்று தெரிகிறது.

1
45917

இந்த சீசனில் சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக வென்றாலும் தொடக்க வீரர்கள் எழுச்சி பெறாமல் இருந்தனர். இதையே தோனியும் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது போல இருந்தது சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக வாட்சனின் ஆட்டம்.

தினேஷ் கார்த்திக்கை கேப்டன் பதவியில் இருந்து தூக்கப் போறாங்களாமே.. பரவும் வதந்தி.. உண்மை என்ன? தினேஷ் கார்த்திக்கை கேப்டன் பதவியில் இருந்து தூக்கப் போறாங்களாமே.. பரவும் வதந்தி.. உண்மை என்ன?

 தூள் கிளப்பிய வாட்சன்

தூள் கிளப்பிய வாட்சன்

இந்த சீசனின் தொடக்கத்திலிருந்தே சரியாக ஆடாமல் திணறிவந்த வாட்சன், சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அபாரமாக ஆடி, 96 ரன்களை குவித்து சிஎஸ்கே அணியின் வெற்றியை தேடிக்கொடுத்தார். சதத்தை தவறவிட்டு கடைசி நேரத்தில் அவர் ஆட்டமிழந்தாலும் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு காரணம் வாட்சன் தான்.

பார்முக்கு வந்தார்

பார்முக்கு வந்தார்

பிளே ஆப் சுற்று போட்டிகள் நெருங்கிவிட்ட நிலையில், சரியான நேரத்தில் வாட்சன் பார்முக்கு திரும்பி உள்ளது, சிஎஸ்கே அணிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. சன்ரைசர்சுக்கு எதிரான போட்டியில் பவுலர்களின் பந்துவீச்சை தெறிக்கவிட்டார்.

பவுண்டரிக்கு பறந்த பந்து

பவுண்டரிக்கு பறந்த பந்து

குறிப்பாக சன் ரைசர்ஸ் அணியின் நட்சத்திர பவுலர் ரஷித் கானின் பந்துவீச்சை டார்கெட் செய்து தாறுமாறாக அடித்தார். அவர் பந்துவீச வந்ததும் 2வது பந்தையே பவுண்டரிக்கு வாட்சன் விரட்டினார்.

ரஷித் முறைப்பு

இதையடுத்து வாட்சனை பார்த்து ரஷித் கான் முறைக்க, வாட்சனும் முறைத்து விட்டு சென்றார். பின்னர் அவரது பந்துகளில் எல்லாம் பவுண்டரிகளும், சிக்சர்களுமாக வாட்சன் வெளுத்தார்.

அதிகரித்த விறுவிறுப்பு

அதிகரித்த விறுவிறுப்பு

ரஷித் கானின் ஓவரில் ரன்கள் அதிகமாக அடித்ததால், அவருக்கு அழுத்தம் அதிகரித்தது. அப்போது, ஒரு சிக்சரை அடித்துவிட்டு ரஷித் கானை லேசாக முறைத்தார். வாட்சன், ரஷித் கான் முறைத்துக் கொண்டது தான், ஆட்டத்தின் விறுவிறுப்பை அதிகரித்தது. அதற்கு பிறகும், ரஷித் கானை விடாமல் பந்துகளை விரட்டி, விரட்டி வெளுத்தார்.

Story first published: Wednesday, April 24, 2019, 15:38 [IST]
Other articles published on Apr 24, 2019
English summary
Rashid Khan Tries To Intimidate Shane Watson.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X