For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"எகிறும்" இந்தியா.. "சரியும்" பாகிஸ்தான்.. அது "ஒன்றே" வித்தியாசம் - முன்னாள் கேப்டன் வேதனை

இஸ்லாமாபாத்: சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் உள்ள வித்தியாசம் என்பது இது ஒன்றே ஒன்று தான் என்று புட்டு புட்டு வைத்திருக்கிறார் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன்.

சர்வதேச கிரிக்கெட்டில், வலிமையான (!?) நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது பாகிஸ்தான். முன்னாள் உலக சாம்பியன், இம்ரான் கான், இன்சமாம், வாசிம் அக்ரம், அக்தர், யூனுஸ் கான், வக்கார் யூனிஸ், அப்ரிடி, பாபர் அசம் என்று பல்வேறு மேட்ச் வின்னர்களை உருவாக்கிய அணி.

WTC Final 2021: இஷாந்த் விடுங்க.. சிராஜ் எடுங்க.. செம WTC Final 2021: இஷாந்த் விடுங்க.. சிராஜ் எடுங்க.. செம

பாகிஸ்தானில் மட்டுமல்ல, உலகின் எந்த நாடுகளுக்கு சென்றாலும் சிறப்பாக விளையாட முடியும் என்று நிரூபித்த அணி. இன்னும் சொல்லப்போனால், இந்தியா - பாகிஸ்தான் நேருக்கு நேர் மோதியதில் அதிக போட்டிகளை வென்றிருப்பது பாகிஸ்தான் தான்.

சரியும் பாகிஸ்தான்

சரியும் பாகிஸ்தான்

ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் அந்த அணியின் வளர்ச்சி கிராஃப் என்பது அவ்வளவாக சொல்லிக்கொள்ளும் படி இல்லை. 2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில், இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றார்கள். அதைத் தவிர அவர்கள் வேறு என்ன சாதித்தார்கள் என்று பார்த்தால்... பதிலை தேடித் கொண்டே இருக்க வேண்டியது தான்.

ஐபிஎல் எனும் சொத்து

ஐபிஎல் எனும் சொத்து

இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீஃப், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையேயான வேறுபாடு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில், "2010க்கு பிறகு இந்திய அணி கிரிக்கெட்டில் வளர்ந்துவிட்டது. பாகிஸ்தானோ சரிந்துவிட்டது. நாம் நமது பயிற்சியாளர்களை scientifical-ஆக உருவாக்க முடியவில்லை. ஆகையால், அவர்கள் வெறும் கண்களால் வீரர்களின் திறமையை பார்த்து தேர்வு செய்கின்றனர். ஐபிஎல் மூலம், எண்ணற்ற வீரர்களின் தகவல்களை சேகரித்து, அதன் மூலம் திறமையான வீரர்களை அடையாளம் கண்டு அவர்களை உருவாக்கி வருகிறது இந்தியா. இதற்கு வெளிநாட்டு பயிற்சியாளர்களும் அவர்களுக்கு உதவுகின்றனர்.

இதுதான் பிரச்சனை

இதுதான் பிரச்சனை

முன்னாள் இந்திய வீரர்கள், வெளிநாட்டு பயிற்சியாளர்கள் என பலரும் இளம் இந்திய வீரர்களின் உருவாக்கத்தில் உதவுகின்றனர். அதுமட்டுமின்றி, நாம் முன்னாள் பாகிஸ்தான் வீரர்களையே பயிற்சியாளர்களாக நியமிக்கிறோம். ஆனால், நிறைய பாகிஸ்தான் சூப்பர் லீக் அணிகள் அவர்களை தங்கள் அணிகளில் பணியாற்ற அனுமதிப்பதில்லை. இதுதான் இங்கு நடைபெறும் மிகப்பெரிய பிரச்சனை" என்று தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்திருக்கிறார்.

ரசிகர்கள் கோரிக்கை

ரசிகர்கள் கோரிக்கை

ரஷீத் லத்தீஃப்பின் இந்த கருத்து குறித்து தான் தற்போது பாகிஸ்தான் ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். சிலர், வெளிநாட்டு பயிற்சியாளர்கள் தேவை எனும் அவரது கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும், பலரும் அவருக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை இன்னும் சிறப்பான முயற்சியாக மாற்ற வேண்டும் என்பதும் ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது. அப்போதுதான் திறமையான பல வீரர்களை கண்டறிய முடியும் என்பதே அவர்களின் வாதம்.

Story first published: Saturday, June 5, 2021, 18:32 [IST]
Other articles published on Jun 5, 2021
English summary
Rashid Latif about India and Pakistan cricket - இந்திய அணி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X