For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கூப்பிட்டு வைச்சு அவமானப்படுத்திட்டாங்க.. கபில் தேவ் - பிசிசிஐ செய்த கேலிக்கூத்து.. வெடித்த சர்ச்சை!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளர் தேர்வு செய்த விவகாரத்தில் இந்திய பயிற்சியாளர்களை அவமானப்படுத்தி விட்டதாக புகார் கூறப்படுகிறது.

அதே போல, அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களான மைக் ஹெஸ்ஸன் மற்றும் டாம் மூடி ஆகியோரையும் அவமானப்படுத்தியதாகவும் சிலர் கூறி வருகிறார்கள்.

2019 உலகக்கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணிக்கு அடுத்த பயிற்சியாளரை தேர்வு செய்ய கபில் தேவ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

தேர்வு

தேர்வு

தற்போது பயிற்சியாளர் பதவியில் இருந்த ரவி சாஸ்திரிக்கு நேரடியாக பதவி நீட்டிப்பு அளிக்கவில்லை. மாறாக பயிற்சியாளர் தேர்வுக்கு விளம்பரம் செய்தது பிசிசிஐ. அந்த தேர்வில் ரவி சாஸ்திரிக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என கூறப்பட்டது.

முன்பே வெளியான முடிவு

முன்பே வெளியான முடிவு

இந்த தேர்வு நடைபெற சில வாரங்கள் இருக்கும் போதே ரவி சாஸ்திரிக்கு தான் மீண்டும் பயிற்சியாளர் பதவி கிடைக்கும் என பரவலாக பேசப்பட்டது. ஆனாலும், நேர்முகத் தேர்வுக்கு இறுதியாக ஆறு பேரை தேர்வு செய்தது கபில் தேவ் தலைமையிலான குழு.

டிராமா போல இருந்தது

டிராமா போல இருந்தது

அந்த ஆறு பேரில் ரவி சாஸ்திரியும் ஒருவர். கடைசியில் தலைமை பயிற்சியாளர் பதவியும் அவருக்குத் தான் கொடுக்கப்பட்டது. நடந்தது எல்லாமே டிராமா போல இருந்ததாக ரசிகர்கள் குற்றம் சாட்டினர்.

கபில் தேவ் கொடுத்த இடம்

கபில் தேவ் கொடுத்த இடம்

மேலும், இந்த தேர்வுக்குப் பின் பேட்டி அளித்த கபில் தேவ் தாங்கள் தேர்வில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் மதிப்பெண் போட்டதாகவும், அதில் ரவி சாஸ்திரி முதல் இடத்தை பிடித்தார் என்றும் குறிப்பிட்டார். இரண்டாம் இடத்தை மைக் ஹெஸ்ஸன், மூன்றாம் இடத்தை டாம் மூடி பிடித்ததாக கூறினார்.

இது அவமானம்

இது அவமானம்

இது தான் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. ரவி சாஸ்திரியை விட மற்றவர்கள் எந்த வகையில் குறைந்தவர்கள் என்ற கேள்வி எழுந்தது. மற்றொரு புறம், டாம் மூடி மூன்றாம் தரம், மைக் ஹெஸ்ஸன் இரண்டாந்தரம், ரவி சாஸ்திரி முதல் தரம் என சிலர் கபில் தேவ் வரிசைப்படுத்தியத்தை விமர்சனம் செய்து வருகின்றனர்.

கடுப்பில் இந்திய பயிற்சியாளர்கள்

கடுப்பில் இந்திய பயிற்சியாளர்கள்

அது மட்டுமின்றி முதல் மூன்று இடங்களில் மற்ற இரண்டு இந்திய பயிற்சியாளர்கள் லால்சந்த் ராஜ்புத் மற்றும் ராபின் சிங் இடம் பெறாததும் சர்ச்சை ஆனது. அவர்கள் இந்த விஷயத்தில் வருத்தத்தில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. பிசிசிஐ ரவி சாஸ்திரியை தான் தேர்வு செய்யப் போகிறது என்றால் இவர்கள் அனைவரையும் ஏன் விண்ணப்பிக்க வைத்து அலைக்கழிக்க வேண்டும் என கேட்டு வருகிறார்கள் விமர்சகர்கள்.

Story first published: Sunday, August 18, 2019, 18:41 [IST]
Other articles published on Aug 18, 2019
English summary
Rating for head coach candidates attracts controversy among Indian coaches
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X