For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டாப்புல இருந்தோம்.. ஆனா அந்த 30 நிமிசம் எல்லாத்தையும் மாத்திருச்சு.. மொத்தமா சறுக்கிட்டோம்!

மும்பை : கடந்த இரு ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் அணியில் தனக்கு ஏற்பட்ட பெரிய ஏமாற்றம் எது என்பது பற்றி பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் ரவி சாஸ்திரி.

இந்திய கிரிக்கெட் அணியில் உலகக்கோப்பை தொடருடன் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக் காலம் முடிந்தது.

அடுத்த பயிற்சியாளரை தேர்வு செய்ய கபில் தேவ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் எடுத்த முடிவின் படி ரவி சாஸ்திரி மீண்டும் பயிற்சியாளர் பதவியில் அமர்ந்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர் தான் இந்திய அணியின் பயிற்சியாளர்.

அந்த கேள்வி

அந்த கேள்வி

இந்த நிலையில் தான் அடுத்து என்ன செய்யப் போகிறேன்? அணியை எப்படி மாற்றப் போகிறேன்? என்பது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா எடுத்த பேட்டியில் கூறி இருக்கிறார். அப்போது இந்திய அணியில் கடந்த இரு ஆண்டுகள் பயிற்சியாளராக இருந்த போது ஏற்பட்ட ஏமாற்றம் எது என கேட்கப்பட்டது.

30 நிமிடங்கள்

30 நிமிடங்கள்

அதற்கு அவர் அளித்த பதிலில், 2019 உலகக்கோப்பை அரை இறுதி தோல்வி தான் மிகப் பெரிய ஏமாற்றம். அந்த 30 நிமிடங்கள் தான் எல்லாவற்றையும் மாற்றி விட்டது. நாங்கள் அங்கே சரியாக இருந்தோம். ஆனால், மொத்தமாக சறுக்கி விட்டது என்றார்.

உச்சத்தில் இருந்தோம்

உச்சத்தில் இருந்தோம்

மேலும், அந்த தொடரில் நல்ல கிரிக்கெட் ஆடினோம். மற்ற அணிகளை விட அதிக போட்டிகளை வென்றோம். புள்ளிப் பட்டியலில் உச்சத்தில் இருந்தோம். அதுவே நாங்கள் எப்படி ஆதிக்கம் செலுத்தினோம் என்பதை கூறும் என்றார்.

மோசமான நாள்

மோசமான நாள்

ஆனால், அது தான் விளையாட்டு. ஒரு மோசமான நாள், ஒரு மோசமான நேரம் காரணமாக நாங்கள் முன்னேற முடியாமல் போனது என்று அரை இறுதி தோல்வி பற்றி குறிப்பிட்டார் ரவி சாஸ்திரி.

உலகக்கோப்பை அரை இறுதி

உலகக்கோப்பை அரை இறுதி

2019 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றில் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்து இருந்தது. புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது. அரையிறுதியில் புள்ளிப் பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்த நியூசிலாந்து அணியுடன் மோதியது.

மூவர் செய்த சொதப்பல்

மூவர் செய்த சொதப்பல்

அந்தப் போட்டியில் இந்திய அணி தான் வெல்லும் என அனைவரும் எண்ணிய நிலையில் இந்தியா சேஸிங்கில் முதல் 30 நிமிடங்கள் சொதப்பியது. ராகுல், ரோஹித், கோலி என மூன்று முக்கிய பேட்ஸ்மேன்களும் வெறும் 1 ரன் எடுத்து வரிசையாக ஆட்டமிழந்தனர்.

பெரிய ஏமாற்றம்

பெரிய ஏமாற்றம்

அதன் பின் தோனி, ஜடேஜா அணியை மீட்டாலும் இறுதியில் வெற்றி பெற முடியாமல் போனது. அந்த 30 நிமிடங்கள் தான் கடந்த இரு ஆண்டுகளில் தனக்கு ஏற்பட்ட பெரிய ஏமாற்றம் என்கிறார் ரவி சாஸ்திரி.

Story first published: Sunday, August 18, 2019, 13:20 [IST]
Other articles published on Aug 18, 2019
English summary
Ravi Shastri accepts World cup semi final defeat was his biggest disappointment in 2 years
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X