For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பழைய பன்னீர்செல்வமாக திரும்பிய ரவி சாஸ்த்ரி.. இனி கலக்கல் தான்..!!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்த்ரி, 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3830 ரன்கள் சேர்த்தார். ஒருநாள் போட்டிகளில் 3108 ரன்கள் எடுத்தார்.

ரவி சாஸ்த்ரி இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனராகவும், தலைமை பயிற்சியாளராகவும் பணிபுரிந்தார்.

ரவி சாஸ்த்ரி இந்திய அணியை வழிநடத்திய போது, ஆஸ்திரேலிய, இங்கிலாந்து ஆகிய மண்ணில் வெற்றி பெற்றது.

ஆனால் ரவி சாஸ்த்ரி என்று கூறினாலே அவரது உயரமும், அவரது காந்த குரலும் தான் நினைவுக்கு வரும், ரவி சாஸ்த்ரி உலகின் தலைச் சிறந்த வர்ணனையாளராக வலம் வந்தார். 2011 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோனி அடித்த சிக்சர் ஆகட்டும், 2007 டி20 உலகக் கோப்பை தொடரில் யுவராஜ் சிங் அடித்த 6 சிக்சர் ஆகட்டும்,

Ravi shastri back to star sports as commentator

இதனை நினைக்கும் போது எல்லாம் கூடவே நமக்கு ரவி சாஸ்த்ரியின் குரல் சேர்ந்து தான் வரும் அந்த அளவுக்கு தனது குரல் மூலம் ரசிகர்களை கட்டி வைத்தவர் ரவி சாஸ்த்ரி, ஆனால் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த காலத்தில் ரவி சாஸ்த்ரியின் கிரிக்கெட் வர்ணணையை அவரது ரசிகர்கள் மிஸ் செய்தனர்.

தற்போது அந்த பதவியிலிருந்து ராஜினாமா செய்ததன் மூலம் மீண்டும் ரவி சாஸ்த்ரி கிரிக்கெட் வர்ணனையாளராக திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனை உறுதிப்படுத்தும் விதமாக ரவி சாஸ்த்ரியை வைத்து ஸ்டார் நிறுவனம் விளம்பரம் ஒன்றை தயாரித்துள்ளது. அதில் ரவி சாத்ரி எதையோ சமைப்பது போன்ற புரமோ ரிலீஸ் ஆனது.

Recommended Video

Ravi Shastri-க்கும் Dravid-க்கும் இடையே உள்ள வித்தியாசம் இதுதான்.. Gambhir சொன்ன தகவல்

ஒரு இடத்திற்கு அடித்துக்கொள்ளும் 4 வீரர்கள்.. இந்திய ப்ளேயிங் 11-ஐ தேர்வு செய்வதில் பெரும் குழப்பம்!ஒரு இடத்திற்கு அடித்துக்கொள்ளும் 4 வீரர்கள்.. இந்திய ப்ளேயிங் 11-ஐ தேர்வு செய்வதில் பெரும் குழப்பம்!

Story first published: Tuesday, December 21, 2021, 19:26 [IST]
Other articles published on Dec 21, 2021
English summary
Ravi shastri back to star sports as commentator பதவியிலிருந்து ராஜினாமா செய்ததன் மூலம் மீண்டும் ரவி சாஸ்த்ரி கிரிக்கெட் வர்ணனையாளராக திரும்ப உள்ளார்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X