For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2011 உலக கோப்பை ஜெயிச்சத பேசாம... தற்பெருமை பேசறீங்களே...? ரவி சாஸ்திரி... இது நியாயமா?

மும்பை:உலகமே ஒரு விஷயத்தை பற்றி பேசிக்கொண்டும், பாராட்டிக் கொண்டும் இருக்கையில் அதற்கு நேர்எதிராக பேசினால் எப்படி இருக்கும். அப்படி பேசித்தான் வாங்கி கட்டியிருக்கிறார் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

2011ம் ஆண்டு உலக கோப்பை தொடரை ஏப்ரல் 2ம் தேதி வென்றது. அந்த நாளை இந்திய கிரிக்கெட் உலகமே கொண்டாடியது. பலரும் தமது வாழ்த்துகளை டுவிட்டரில் வெளியிட்டு நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினும், வீடியோ வெளியிட்டு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த முறையும் இந்திய அணி உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

விவாத பொருள்

விவாத பொருள்

ஊரே ஒரு விஷயத்தை பற்றி பேசிக் கொண்டிருக்க... ஒரு நபர்... அதுவும் இந்தியாவின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்த கருத்து, பெரிய விவாத பொருளாக மாறிவிட்டது.

டெஸ்ட் புகழ்

டெஸ்ட் புகழ்

ஏப்ரல் 2ம் தேதி நாடே இந்தியாவின் உலக கோப்பை வெற்றியை, அதன் நினைவை கொண்டாடி வருகிறது. ஆனால், ரவி சாஸ்திரி அதை பற்றி துளிகூட பேசாமல் டெஸ்ட் சாதனையை பற்றி புகழ்ந்து தள்ளியுள்ளார்.

வர்ணனையாளர்

வர்ணனையாளர்

2011ம் ஆண்டு இறுதிப்போட்டியில் தோனி அடித்த அந்த சிக்சர் உலகளவில் பிரபலம். அதன் பிறகான உலக கோப்பை வெற்றி கொண்டாட்டத்தின் போது வர்ணனை அளித்து கொண்டு இருந்தவர் இதே ஷாட்சாத் ரவி சாஸ்திரிதான்.

டெஸ்ட் அணி வெற்றி

டெஸ்ட் அணி வெற்றி

எனவே உலக கோப்பையின் வெற்றி தருணங்களில் அவரும் பங்கெடுத்து இருக்கிறார். ஆக அதை பற்றி பேசுவதை விட்டுவிட்டு டெஸ்ட் அணியின் வெற்றியை பற்றி பேசியிருக்கிறார்.

ரவி சாஸ்திரி டுவிட்டர்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் இந்திய அணி தொடர்ந்து 3 முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் வென்றதை பற்றி பாராட்டுகளை குறிப்பிட்டு இருக்கிறார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்

டெஸ்ட் சாம்பியன்ஷிப்

அதற்கான காரணம் இதுதான்... இந்த ஆண்டுக்கான ஐசிசி டெஸ்ட் சாம்பியன் ஷிப் கவுரவத்தை கோலி தலைமையிலான இந்திய அணி மீண்டும் கைப்பற்றி இருக்கிறது. இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கவுரவத்தை தொடர்ந்து 3வது ஆண்டாக பெற்றுள்ளது.அதனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

தற்பெருமை சாஸ்திரி

தற்பெருமை சாஸ்திரி

நாடே கொண்டாடும் உலக கோப்பை நினைவை இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எப்படி ஒதுக்கலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரசிகர்கள்... தற்பெருமை பற்றி பேசி கோபத்தை ஏற்படுத்துகிறார் என்று கூறியிருக்கின்றனர்.

Story first published: Wednesday, April 3, 2019, 14:38 [IST]
Other articles published on Apr 3, 2019
English summary
Ravi Shastri Congratulates Team India For Winning Test 3 Times makes controversial.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X