பாவம் மனுஷன்.. இந்திய அணிக்காக அவ்வளவு செய்தார்.. கோபம் அடைந்த பீல்டிங் கோச்.. ஷாக் பின்னணி

சிட்னி: இந்திய அணிக்காக ரவி சாஸ்திரி நிறைய செய்து இருக்கிறார், ஆனால் அவரை தேவையின்றி கலாய்க்கிறார்கள் என்று அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் வென்றதில் இருந்தே இந்திய அணிக்குள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் மதிப்பு உயர்ந்துள்ளது. ரவி சாஸ்திரியை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தவர்கள் கூட அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர்.

யாரும் கோல் அடிக்கவில்லை.. டிராவில் முடிந்த போட்டி.. ஹைதராபாத் - ஜாம்ஷெட்பூர் ஏமாற்றம்!

ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணியை இந்தியா வீழ்த்த ரவி சாஸ்திரிதான் முக்கிய காரணம் என்று அவரை புகழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் ரவி சாஸ்திரி குறித்து இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் முக்கியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

ஸ்ரீதர்

ஸ்ரீதர்

ஸ்ரீதர் தனது பேச்சில், இந்திய அணிக்காக ரவி சாஸ்திரி நிறைய செய்து இருக்கிறார். அவர் எடுக்கும் முடிவுகள் மிகவும் சிறப்பானதாக இருக்கும். கோலி நாடு திரும்பிய பின் அவருக்கு பதிலாக பேட்ஸ்மேனை இறக்காமல் ஜடேஜாவை இறக்கியது சாஸ்திரிதான். இப்படி சாஸ்திரி எடுத்த முடிவுகள் எல்லாமே இந்திய அணிக்கு பலம் சேர்த்தது.

இணையம்

இணையம்

ஆனால் அவருக்கு எதிரான இணையத்தில் தவறான கருத்து நிலவுகிறது. தன்னை பற்றி யார் என்ன நினைக்கிறார்கள் என்பதை குறித்து சாஸ்திரி கவலைப்பட மாட்டார். இணையத்தில் வரும் விமர்சனங்களை பற்றி எல்லாம் ரவி சாஸ்திரி கொஞ்சம் கூட கவலைப்பட மாட்டார்.

மீம்கள்

மீம்கள்

இந்த முறை மட்டுமல்ல இதற்கு முன் ரவி சாஸ்திரி தனது ஆலோசனைகள் மூலம் ஆட்டத்தின் போக்கை மொத்தமாக மாற்றி இருக்கிறார். ஆட்டத்தை மிக உன்னிப்பாக கவனித்து, முக்கியமான நேரத்தில் முடிவு எடுக்க கூடியவர்தான் ரவி சாஸ்திரி.

 தவறான கருத்து

தவறான கருத்து

அவருக்கு கிரிக்கெட் குறித்தும், களம் குறித்தும் இருக்கும் அறிவு அளப்பரியது. அவரை குறைவாக எடை போட கூடாது. இணையத்தில் அவருக்கு எதிராக தவறான மீம்கள் போடப்படுகிறது. தேவையின்றி தவறான கருத்துக்கள் பகிரப்படுகிறது, என்று ஸ்ரீதர் குறிப்பிட்டு இருக்கிறார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Ravi Shastri did a lot for Team India and still gets trolled says Team India Fielding Coach Sridhar.
Story first published: Monday, January 25, 2021, 13:26 [IST]
Other articles published on Jan 25, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X