“தோனியின் அருமை இப்போ தெரியுதா?” தினேஷ் கார்த்திக் செய்த பெரும் தவறு.. ரவி சாஸ்திரி கடும் விமர்சனம்

மொஹாலி: தினேஷ் கார்த்திக் செய்த தவறு குறித்து பேசிய ரவிசாஸ்திரி, எம்.எஸ்.தோனியை குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.

Recommended Video

Dinesh Karthik செய்த தவறு இதுதான்.. Ravi Shastri சொன்ன விளக்கம்

ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்த போட்டியில் அதிக ஸ்கோரை குவித்த போதும், இந்திய அணி தோல்வியடைந்ததால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.

இந்த போட்டியில் ஒரு முக்கியமான தவறை தினேஷ் கார்த்திக் செய்யவில்லை என்றால் இந்தியா வென்றிருக்கலாம். ஆட்டத்தின் 5வது ஓவரில் யுவேந்திர சாஹல் வீசிய பந்தை, கேமரான் க்ரீன் ஸ்வீப் ஷாட் ஆட முயன்றார். ஆனால் பந்து மிஸ்ஸாகி பேடில் பட்டது. அப்போது இந்திய அணி தரப்பில் இருந்து எந்தவித டி.ஆர்.எஸ்-ம் கேட்கவில்லை. குறிப்பாக தினேஷ் கார்த்திக் அதை கண்டுக்கொள்ளவே இல்லை.

ஆனால் டி.ஆர்.எஸ் நேரம் முடிந்த பிறகு அந்த பந்து மீண்டும் பரிசோதிக்கப்பட்டது. அதில் எல்.பி.டபள்யூ அவுட் ஆகவிருந்தது தெரியவந்தது. ஒருவேளை அப்போது தினேஷ் கார்த்திக் யோசித்திருந்தால் 17 ரன்களில் க்ரீனை அவுட்டாக்கியிருக்கலாம். அதில் இருந்து தப்பிய க்ரீன் 30 பந்துகளில் 61 ரன்களை விளாசி வெற்றிக்கு வித்திட்டார்.

இதுகுறித்து பேசிய ரவி சாஸ்திரி, பேடில் பந்து பட்டது தெளிவாக இருந்தது. ஆனால் பந்து வெளியில் சென்றிருக்கும் என எப்படி தினேஷ் கார்த்திக் நினைத்தார் என்பது ஆச்சரியமாக உள்ளது. கீப்பர் என்பது மிக முக்கிய பொறுப்பாகும். இந்த இடத்தில் தான் எம்.எஸ்.தோனி எவ்வளவு சிறப்பு என்பது நமக்கு தெரியும். அவரின் தேவையையும் நாம் உணர்வோம் என சாஸ்திரி கூறியுள்ளார்.

தினேஷ் கார்த்திக் கழுத்தை நெறித்த ரோகித்.. ஏன்பா இவ்வளவு கோபம்..முதல் டி20ல் நடந்த சுவாரஸ்யம்- வீடியோதினேஷ் கார்த்திக் கழுத்தை நெறித்த ரோகித்.. ஏன்பா இவ்வளவு கோபம்..முதல் டி20ல் நடந்த சுவாரஸ்யம்- வீடியோ

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Ravi shastri's remark about Dhoni after Dinesh Karthik's big mistake in India vs australia 1st T20 match
Story first published: Wednesday, September 21, 2022, 20:18 [IST]
Other articles published on Sep 21, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X