For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அதுக்கெல்லாம் அஸ்வின் வொர்த் இல்லை.. ஜடேஜா தான் சூப்பர்..! அதனால் தான் அவரை செலக்ட் பண்ணினோம்

கிங்ஸ்டன்: 2 டெஸ்ட் போட்டிகளுக்கான மைதானம் பிளாட்டாக உள்ளது, அதில் அஸ்வினுக்கு பவுலிங் எப்படி போடுவது என்று தெரியாது என்பதால் எடுக்க வில்லை என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சரியான ரெக்கார்ட் வைத்திருக்கும் அஸ்வின் 11 பேர் கொண்ட அணியில் தேர்வு செய்யப் படவில்லை. அவர் உட்கார வைக்கப் பட்டு இருக்கிறார். ஜடேஜாவை அணியில் தேர்வு செய்ததைப் பற்றி கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதாவது அஸ்வினைத் தேர்வு செய்யாதது அதிர்ச்சியளிக்கிறது என்று சுனில் கவாஸ்கர் உள்ளிட்டோர் அதிர்ச்சி தெரிவித்திருந்தனர். இந் நிலையில் ஜடேஜா ஏன் தேர்வு செய்யப்பட்டார் என்று ரவி சாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

ஜடேஜா சாதனை

ஜடேஜா சாதனை

ஜடேஜாவின் சாதனைகள் தான் காரணம். அவர் இந்திய அணிக்கு என்ன கொண்டு வருகிறார் என்பதுதான் முக்கியம். உலகின் சிறந்த பீல்டர் அவர். பேட்டிங் முன்னேற்றம் காட்டி இருக்கிறார்.

பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

இந்த 2 டெஸ்ட் போட்டிகளுக்கான பிட்சைப் பாருங்கள், பிளாட் ட்ராக்காக இருக்கிறது. அங்கு ஸ்பின்னர்களுக்கு பெரிதாக எதுவும் பலன் இருக்காது என்று கருதினோம். அதனால் கட்டுப்பாட்டுடன் பவுலிங் பண்ண வேண்டும்.

சிறப்பான பவுலிங்

சிறப்பான பவுலிங்

அதற்கு ஜடேஜா தான் சரியானவர். அதனால் தான் அவரை தேர்வு செய்தோம். ஒரு வேளை நாம் முதலில் பவுலிங் செய்ய வேண்டியிருந்தால் பிட்சின் ஈரப்பதம் ஜடேஜாவின் பந்து வீச்சு உதவும். அதனால்தன ஜடேஜாவை தேர்வு செய்தோம்.

கடினமான முடிவு

கடினமான முடிவு

அஸ்வின் உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர். ஆகவே அவரையோ, குல்தீப் யாதவையோ உட்கார வைப்பது என்பது முடிவானது. அது கடினமான முடிவாகும். ஆனாலும் ஜடேஜா தான் பொருத்தமானவர் என்றார்.

Story first published: Sunday, September 1, 2019, 11:00 [IST]
Other articles published on Sep 1, 2019
English summary
Ravi shastri explains why we selected jajeda instead of ashwin?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X