For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஹர்திக் பாண்டியா ஓய்வு.. ரவி சாஸ்த்ரி சொன்ன தகவலால் பரபரப்பு

மும்பை: 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு ஹர்திக் பாண்டியா ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

Recommended Video

Hardik Pandya ODI போட்டிகளில் ஓய்வு அறிவிப்பார் -Ravi Shastri *Cricket

தற்போது ஐசிசி, தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
டெஸ்ட் போட்டி மற்றும் டி20 போட்டிகளை ரசிகர்கள் விரும்பி பார்ப்பதாகவும் ஒரு நாள் போட்டிக்கு முன்பை போல வரவேற்பு கிடைப்பதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது .

மேலும் ஐபிஎல் போன்ற தொடர்களில் விளையாடுவதற்காக பல்வேறு வீரர்களும் விரும்பி வருகின்றனர். இதனால் அனைத்து போட்டிகளிலும் விளையாட முடியாத நிலை ஏற்படுவதால் சமீபத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென்ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

டெஸ்ட் முக்கியத்துவம்

டெஸ்ட் முக்கியத்துவம்

இதற்குக் காரணம் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதால் தமக்கு அழுத்தம் ஏற்படுவதாக பென்ஸ்டோக்ஸ் கூறினார். இதனால் கிரிக்கெட் போட்டிகளில் அட்டவணையை சரி செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, டெஸ்ட் கிரிக்கெட் தன்னுடைய முக்கியத்துவத்தை என்றுமே இழக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.

 ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா

ஏற்கனவே வீரர்கள் எந்த போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதை தீர்மானித்து முடிவெடுத்து வருகிறார்கள் .தற்போது ஹர்திக் பாண்டியாவை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் டி20 கிரிக்கெட் போட்டியில் தான் விளையாடுகிறார். அது குறித்து அவர் தெளிவான முடிவில் இருக்கிறார். வேறு எதிலும் விளையாட அவர் விரும்பவில்லை. தற்சமயம் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு நடைபெறுவதால் ஹர்திக் பாண்டியா ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

வீரர்களின் உரிமை

வீரர்களின் உரிமை

உலகக் கோப்பை முடிந்தவுடன் அவர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விடுவார். இதேபோன்று வேறொரு வீரரும் தங்களுக்கு பிடித்த விளையாட்டு தேர்ந்தெடுத்து விளையாடுவார்கள். அது அவர்களுடைய உரிமை. ஐபிஎல் போன்ற தொடர்கள் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அனைத்து நாடுகளும் தங்களுக்கு என டி20 தொடர்களின் நடத்துகின்றன .

 இது தான் எதிர்காலம்

இது தான் எதிர்காலம்

நிலைமை அப்படி இருக்க உங்களால் எப்படி இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடியும். என்னை கேட்டால் இரண்டு நாடுகள் மோதிக் கொள்ளும் டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரை ஒரே அடியாக நிறுத்தி விட வேண்டும். அதுதான் சரியான வழி . அதேபோன்று அனைத்து வீரர்களும் அவர்கள் விரும்பும் படி எந்த நாட்டில் நடைபெறும் டி20 தொடரிலும் விளையாடலாம் என்று அறிவிக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

Story first published: Saturday, July 23, 2022, 23:43 [IST]
Other articles published on Jul 23, 2022
English summary
Ravi shastri feels Hardik pandya will quit 50 over format after 2023 world cupஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஹர்திக் பாண்டியா ஓய்வு.. ரவி சாஸ்த்ரி சொன்ன தகவலால் பரபரப்பு
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X