For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவர் தான் இந்தியாவின் புதிய கோச்..? அப்ப 2023 உலக கோப்பையும் அம்போ தான்… ரசிகர்கள் அதிருப்தி

Recommended Video

Praveen Amre Indian Coach : இவர் தான் இந்திய அணியின் புதிய கோச்? ஆலோசனையில் பிசிசிஐ- வீடியோ

மும்பை: கிட்டத்தட்ட 2 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ள நிலையில், இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியே நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் பீல்டிங், பேட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்து வகையான பயிற்சியாளர் பதவியும் நடந்த உலக கோப்பையுடன் முடிவடைந்தது.

உலக கோப்பை வரை இந்திய அணி பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப் பட்டிருந்தார். உலக கோப்பையில் அரையிறுதியோடு இந்திய அணி வெளியேறிய நிலையில் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டது.

2,000 விண்ணப்பங்கள்

2,000 விண்ணப்பங்கள்

இதுவரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர், உதவிப் பயிற்சியாளர், பீல்டிங் பயிற்சியாளர், பேட்டிங், பந்துவீச்சுப் பயிற்சியாளர், பிசியோதெரபிஸ்ட் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கும் ஏறக்குறைய 2 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து உள்ளதாக பிசிசிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன.

உண்மை இல்லை

உண்மை இல்லை

இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்தனா பயிற்சியாளர் பதவி கோரி விண்ணப்பித்து உள்ளார் என்ற செய்தி வந்தது. ஆனால், அதில் உண்மையில்லை என தெரியவந்துள்ளது.

ரவிசாஸ்திரியே தொடருவார்

ரவிசாஸ்திரியே தொடருவார்

பிசிசிஐக்கு வந்துள்ள விண்ணப்பங்களில் பயிற்சியாளர் பதவிக்கு தகுதியான நபர்கள் குறைவு. எனவே,கோலியின் விருப்பம், அணியில் 2 ஆண்டுகால செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் ரவி சாஸ்திரியே பயிற்சியாளர் பதவியில் தொடர்வார் என்று பிசிசிஐ தரப்பில் தகவல்கள் கசியவிடப்பட்டுள்ளன.

2021 வரை பயிற்சியாளர்

2021 வரை பயிற்சியாளர்

அதனால் 2021ம் ஆண்டு நடக்கும் டி20 உலக கோப்பை போட்டிவரை இந்திய அணிக்கு பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தொடர்வார் என்று கூறப்படுகிறது. இந்த இரு ஆண்டுகள் இடைப்பட்ட காலத்தில் ரவி சாஸ்திரி தலைமையில் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப், டி20 உலக கோப்பை, ஐசிசி ஒருநாள் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் என்று தெரிகிறது. அதன் பிறகு உலககோப்பை 2023 வரை பயிற்சியாளராக நீட்டிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரசிகர்கள் அதிருப்தி

ரசிகர்கள் அதிருப்தி

ரவி சாஸ்திரியே அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்க முக்கிய வீரர்கள் சிலர் அதிருப்தி தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரசிகர்களும் இந்த விவகாரத்தில் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது. அணியில் வீரர்கள் தரப்பில் கோஷ்டி உருவாக இவரே காரணம் என்றும், இதுவரை எந்த முக்கிய கோப்பையையும் அவர் பெற்றுத் தர வில்லை என்று கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, August 2, 2019, 10:51 [IST]
Other articles published on Aug 2, 2019
English summary
Ravi shastri may be the new Head coach for Indian team again, sources said.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X