For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஓகே.. ! இவரு தான் இந்தியாவின் புதிய கோச்..! ஷாக் தரும் பிசிசிஐ..! ஆக.15க்கு பிறகு அறிவிப்பு?

மும்பை: இந்திய கிரிக்கெட் தலைமை பயிற்சியாளருக்கான இண்டர்வியூ, ஆக. 15க்கு பின்னர் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவில் ரவி சாஸ்திரியே பயிற்சியாளராக தேர்வாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

உலக கோப்பை தொடருடன் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்ட அனைவரின் பதவிக்காலம் முடிந்தது. தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இருந்ததால் அனைவரின் ஒப்பந்தமும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

அணிக்கான தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உட்பட பலர் விண்ணப்பித்துள்ளனர். ஒட்டு மொத்தமாக 2 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனனர் என்று தெரிகிறது. தலைமை பயிற்சியாளரை முன்னாள் கேப்டன் கபில் தேவ், அனுஷ்மன் கெய்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோர் அங்கிய மூவர் குழு தேர்வு செய்கின்றனர்.

ஆக.15க்கு பிறகு நடத்தலாம்

ஆக.15க்கு பிறகு நடத்தலாம்

தலைமை பயிற்சியாளருக்கான நேர்முகத்தேர்வு வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பின் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த நேர்காணல் ஆகஸ்ட் 13 அல்லது 14ம் தேதி நடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

நேர்காணல் போதும்

நேர்காணல் போதும்

இதுகுறித்து பிசிசிஐ தரப்பு வட்டாரங்கள் கூறியிருப்பதாவது: தலைமை பயிற்சியாளர் குறித்த கூட்டம் வரும் ஆகஸ்ட் 13, 14ம் தேதியில் நடக்கப் போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தேர்வுக்கு 6 பேர் தேர்வு செய்யப்பட்டு அழைக்கப் படுவார்கள். அதனால் இந்த நேர்கானலை நடத்த ஒரே ஒருநாள் போதுமானது என தோன்றியது.

வேலைகள் பாக்கி

வேலைகள் பாக்கி

ஆனால் இன்னும் சில வேலைகள் பாக்கி உள்ளது. அவை அனைத்தும் ஆகஸ்ட் 15ம் தேதிக்கு முன்பாக முடியும் என்று தெரியவில்லை. எனவே பயிற்சியாளர் தேர்வு, அதன் பிறகு நடக்கும் என்று சொல்லலாம் என்று தெரிவித்தனர்.

குவித்த வெற்றிகள்

குவித்த வெற்றிகள்

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. இங்கிலாந்து உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் இவரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. ஆனாலும், அவரது பயிற்சியில் இந்திய கிரிக்கெட் அணி 70% வீதத்துக்கு மேல் வெற்றிகளை குவித்துள்ளது.

ரவி சாஸ்திரி?

ரவி சாஸ்திரி?

அதில் வரலாற்று சிறப்பு மிக்க ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றி, 2 ஆசிய கோப்பை, உலகக்கோப்பை அரையிறுதி என அசத்தி உள்ளது. பல வெற்றிகளை குவித்துள்ளதால், அவரையே மீண்டும் பயிற்சியாளராக்க பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அனைத்து அறிவிப்புகளுமே ஆக.15க்கு பிறகே இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Story first published: Monday, August 12, 2019, 8:06 [IST]
Other articles published on Aug 12, 2019
English summary
Ravi shastri may retain as new coach, bcci sources said.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X