For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

10 வருடத்தில் உருவாக்க முடியும்.. 10 நாளிலும் உருவாக்க முடியும்.. ரவி சாஸ்திரி மேஜிக்.. மிரண்ட ஆஸி

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மிக சிறப்பான பவுலிங் படையை இந்திய அணி உருவாக்கியதும் கூட இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஆகும்.

பிரிஸ்போனில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் வென்று பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தக்க வைத்துள்ளது. இந்திய டெஸ்ட் வரலாற்றில் இது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

தொடர்ச்சியாக இரண்டு முறை ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் நடக்கும் தொடரில் வீழ்த்தி இந்தியா புதிய சாதனை படைத்து இருக்கிறது.

வெற்றி

வெற்றி

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மிக சிறப்பான பவுலிங் படையை இந்திய அணி உருவாக்கியதும் கூட இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஆகும். இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா சார்பாக ஹஸல்வுட், கும்மின்ஸ், ஸ்டார்க் போன்ற வலுவான ஸ்பீட் பவுலர்கள் பந்து வீசினார்கள். அவர்களாலேயே எல்லா இன்னிங்சிலும் 10 விக்கெட் வீழ்த்த முடியவில்லை.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இந்திய பவுலர்கள் ஆஸ்திரேலிய பவுலர்களை விட சிறப்பாக செயல்பட்டனர். ஹஸல்வுட் போல ஆக்ரோஷமான பவுலிங்கை செய்யவில்லை என்றாலும் கூட துல்லியமான பவுலிங்கை விக்கெட் எடுக்கும் வகையில் வீசினார்கள். வீரர்களை தாக்குவதை விட விக்கெட் எடுப்பதில் குறியாக இருந்தனர்.

எப்படி

எப்படி

இந்திய ஸ்பீட் பவுலிங் படை என்பது பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோரை கொண்டது. இவர்களுக்கு ஏதாவது நேர்ந்தால் இஷாந்த் , உமேஷ் யாதவை இந்திய அணி தேர்வு செய்யும். இந்த 5-6 பவுலர்களை இந்திய அணி கடந்த 5-10 வருடங்களாக உருவாக்கி வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக இவர்களை இந்திய அணி மெருகேற்றி வந்தது.

சாஸ்திரி

சாஸ்திரி

அதிலும் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்திய அணியின் பும்ரா, அஸ்வின், ஷமி ஆகியோரின் எழுச்சிக்கும் உமேஷ், ஜடேஜா, புவனேஷ்வர் குமார், இஷாந்த் போன்ற மாற்று பவுலர்களின் எழுச்சிக்கும் காரணமாக இருந்தார். ஒருவர் இல்லையென்றாலும் இன்னொரு பவுலர்கள் சிறப்பாக பவுலிங் செய்யும் வகையில் இந்திய அணியின் பவுலிங் அட்டாக்கை சாஸ்திரி மாற்றி வைத்து இருந்தார்.

கடினம்

கடினம்

இந்திய ஸ்பீட் பவுலிங்கின் இந்த எழுச்சிக்கு பின் பெரிய முயற்சியும் உழைப்பும் உள்ளது. அதே சமயம் இன்னொரு பக்கம் பல புதிய மாற்று வீரர்களை கடந்த மூன்று வாரங்களில் சாஸ்திரி உருவாக்கி உள்ளார். டெஸ்டில் பந்து வீசி அனுபவம் இல்லாத நடராஜன், ஷரத்துல், வாஷிங்டன் சுந்தர், சிராஜ், சைனி போன்ற வீரர்களையும் குறைந்த காலத்தில் ரவி சாஸ்திரி பயிற்சி கொடுத்து இவர்களை டெஸ்ட் போட்டிக்கு தயார் செய்தார்.

 டி 20 வீரர்கள்

டி 20 வீரர்கள்

அதிலும் சுந்தர், நடராஜன் எல்லாம் டி 20 ஸ்டைல் வீரர்கள். இவர்களை இந்திய டெஸ்ட் அணிக்காக மாற்றியது சாஸ்திரியின் மேஜிக் அன்றி வேறு எதுவும் இல்லை. இவர்கள் மீது நம்பிக்கை வைத்து ஆஸ்திரேலியாவில் இவர்களை களமிறங்கியதற்கே ரவி சாஸ்திரிக்கு ஒரு சல்யூட் வைக்க வேண்டும். இன்னொரு பக்கம் கார்த்திக் தியாகி போன்ற வீரர்களையும் இந்திய அணி தயாராக வைத்து இருந்தது.

டாப்

டாப்

டாப் வரிசையில் 3 பவுலர்கள் அவர்கள் இல்லையென்றால் அனுபவம் வாய்ந்த 3 பவுலர்கள் அவர்களும் இல்லையென்றால் புத்தி திறமை கொண்ட 3 பவுலர்கள் என்று இந்திய அணியின் பவுலிங்கில் ரவி சாஸ்திரி புதிய மேஜிக் நிகழ்த்தி உள்ளார். இது கோலி உருவாக்கிய அணி, அதனால்தான் இப்படி இருக்கிறது.

கோலி

கோலி

கோலி போல இந்திய அணியில் எல்லோரும் ஆக்ரோஷமாக ஆடுகிறார்கள் என்று ரவி சாஸ்திரி இன்று போட்டிக்கு பின் புகழ்ந்து இருந்தார். அவரின் பெருந்தன்மையை இந்த பேட்டி காட்டுகிறது. ஒரு பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இந்திய அணி நினைத்து பார்க்க முடியாத உயரத்திற்கு மிக அமைதியாக கொண்டு சென்று இருக்கிறார்.

Story first published: Tuesday, January 19, 2021, 19:07 [IST]
Other articles published on Jan 19, 2021
English summary
Coach Ravi Shastri played a magical role in creating an aggressive Team India Bowling line Up.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X