For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரெய்னாவை விட்டதுக்கு சிஎஸ்கேக்கு நல்லா வேணும்.. ரவி சாஸ்த்ரி சொன்ன உண்மை.. ரொம்ப கஷ்டம் என கருத்து

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் ரெய்னா இல்லாதது தான் என்று ரவி சாஸ்த்ரி கூறியுள்ளார்.

நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சிஎஸ்கே, இம்முறை எப்போதும் இல்லாத அளவுக்கு புள்ளி பட்டியலில் 9வது இடத்தை பிடித்தது.

ரெய்னாவை விட்டீங்களே.. சிஎஸ்கேக்கு நல்லா வேணும்.. ரவி சாஸ்த்ரி சொன்ன உண்மை.. ரொம்ப கஷ்டம் என கருத்துரெய்னாவை விட்டீங்களே.. சிஎஸ்கேக்கு நல்லா வேணும்.. ரவி சாஸ்த்ரி சொன்ன உண்மை.. ரொம்ப கஷ்டம் என கருத்து

சிஎஸ்கேவின் தோல்விக்கு கேப்டன்கள் மாற்றம், வீரர்களின் காயம் என்று பல காரணங்கள் கூற பட்டாலும், ரவி சாஸ்த்ரி கூறியுள்ள கருத்து யோசிக்க வேண்டிய விஷயமாகவே உள்ளது.

ரெய்னாவை மறந்துவிட்டார்கள்

ரெய்னாவை மறந்துவிட்டார்கள்

இது குறித்து பேசிய ரவி சாஸ்த்ரி, ஐபிஎல் தொடரில் பல ஆண்டுகளாக சிஎஸ்கே சிறப்பாக செயல்பட்டது. ஆனால் அதற்கு எல்லாம் ரெய்னாவும் ஒரு காரணம் என்று அவர்கள் மறந்துவிட்டனர். ரெய்னா தனது திறமையை ஐபிஎல் தொடரில் நிரூபித்தவர். ரெய்னா அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். இதனால் சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் ஒரு நிலைத்தன்மை இருக்கம்.

மற்றவர்களுக்கு சுதந்திரம்

மற்றவர்களுக்கு சுதந்திரம்

ரெய்னாவின் பேட்டிங் மற்ற வீரர்கள் மீதான அழுத்தத்தை குறைத்துவிடும். இதனை தான் சிஎஸ்கே தற்போது மிஸ் செய்கிறது. ரெய்னா மாதிரி ஒரு வீரர் பேட்டிங் வரிசையில் இருக்கும் போது ராயுடு, ராபின் உத்தப்பா ஆகியோருக்கு தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்த சுதந்திரம் கிடைக்கும்.

கண்டுபிடிக்க வேண்டும்

கண்டுபிடிக்க வேண்டும்

தற்போது ரெய்னா மாதிரி ஒரு வீரரை அடுத்த சீசனில் சிஎஸ்கே கண்டுபிடிக்க வேண்டும் என்று ரவி சாஸ்த்ரி கூறினார். ஐபிஎல் தொடரில் தொடர்ந்து அதிக முறை 400 ரன்கள், 300 ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்ற சுரேஷ் ரெய்னா, கடந்த சீசனில் மோசமான ஃபார்ம் காரணமாக வெளியே உட்கார வைக்கப்பட்டார்.

தவறு நடந்தது எங்கே?

தவறு நடந்தது எங்கே?

ரெய்னா இடத்தில் தான் கடந்த சீசனில் மூன்றாவது வீரராக மொயின் அலியை சிஎஸ்கே களமிறக்கியது. அவரும் அதிரடியாக விளையாட நடுவரிசையில் ராபின் உத்தப்பா, ராயுடு என அனைவரும் கைக் கொடுத்தனர். ஆனால் இம்முறை சில போட்டியில் மொயின் அலிக்கு 3வது வீரராக களமிறங்க வாய்ப்பு தரப்படவில்லை. உத்தப்பாவும் சொதப்பியதால் சிஎஸ்கே நடுவரிசையே சிக்கலானது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, May 26, 2022, 21:06 [IST]
Other articles published on May 26, 2022
English summary
Ravi Shastri Points out How CSK Badly missed suresh raina service ரெய்னாவை விட்டதுக்கு சிஎஸ்கேக்கு நல்லா வேணும்.. ரவி சாஸ்த்ரி சொன்ன உண்மை.. ரொம்ப கஷ்டம் என கருத்து
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X