ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேக்குதா.. பிட்ச் சர்ச்சைக்கு இடையே ரவி சாஸ்திரி போட்ட சுவாரஸ்ய ட்வீட்

அகமதாபாத்: இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பிட்ச் சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் ரவிசாஸ்திரி வேடிக்கை ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2 -1 என முன்னிலை வகிக்கிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வென்ற நிலையில் அடுத்த 2 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்தது.

இதற்கு டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு சாதகமாக பிட்ச் அமைக்கப்பட்டதே காரணம் என சர்ச்சை எழுந்துள்ளது. இதனிடையே ரவிசாஸ்திரி வேடிக்கை ட்வீட் ஒன்றை பதிவிட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 மோசமான பிட்ச்

மோசமான பிட்ச்

அகமதாபாத் ஸ்டேடியம் தொக்கம் முதலே ஸ்பின்னர்களுக்கான பிட்சாக இருந்ததால் இங்கிலாந்து அணி திணறியது. குறிப்பாக இங்கிலாந்து தரப்பில் பார்ட் டைம் ஸ்பின்னராக இருக்கும் ரூட் 5 விக்கெட்களை வீழ்த்தினார். இந்திய அணி தரப்பில் அஸ்வின் மற்றும் அக்‌ஷர் சுழலில் சிக்கி இங்கிலாந்து 2 இன்னிங்ஸ்களிலும், 112 & 81 ரன்களுக்கு சுருண்டது.

குற்றச்சாட்டுகள்

குற்றச்சாட்டுகள்

3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு சாதகமாக பிட்ச் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ஐசிசி இதனை கண்டுக்கொள்ளாமல் உள்ளது என்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சுவாரஸ்ய ட்வீட்

பிட்ச் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி வேடிக்கை ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். ட்விட்டரில் அவரை கிண்டல் செய்து போட்ட மீம் ஒன்றுக்கு பதிலளித்துள்ள அவர், இது போன்ற நெருக்கடியான நேரத்தில் இது போன்று சிரிப்பை தருவது மகிழ்ச்சியாக உள்ளது.

இறுதி போட்டி

இறுதி போட்டி

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2 -1 என முன்னிலையில் s. 4வது மற்றும் கடைசி போட்டி வரும் மார்ச் 4ம் தேதி நடக்கவுள்ளது. இப்போட்டியும் அகமதாபாத் மோதிரா மைதானத்திலேயே பகலிரவு போட்டியாக நடக்கவுள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Ravi Shastri's Epic Response to meme while pitch controversy
Story first published: Saturday, February 27, 2021, 22:33 [IST]
Other articles published on Feb 27, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X