For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த பையன் கிட்ட கொஞ்சம் சச்சின், சேவாக், லாரா இருக்காங்க.. இது கொஞ்சம் ஓவரா இல்லை?

Recommended Video

அந்த பையன் கிட்ட கொஞ்சம் சச்சின், சேவாக், லாரா இருக்காங்க, ரவி சாஸ்திரி புகழாரம்- வீடியோ

ஹைதராபாத் : இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெற்றிக்கு பின் இளம் வீரர் ப்ரித்வி ஷாவை புகழ்ந்து தள்ளி உள்ளார்.

ப்ரித்வி ஷா பதினெட்டு வயது மட்டுமே ஆன இளம் வீரர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் அறிமுகமான அவர் முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார்.

இரண்டாம் டெஸ்டிலும் அரைசதம் அடித்தார் ப்ரித்வி ஷா. இரண்டாவது டெஸ்டில் ஒருநாள் போட்டி போல அதிரடியாக ஆடிய ப்ரித்வி ஷா 52 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார்.

கிரிக்கெட் விளையாட பிறந்தவர்

கிரிக்கெட் விளையாட பிறந்தவர்

ப்ரித்வி ஷா பற்றி பேசிய ரவி சாஸ்திரி, "அவர் கிரிக்கெட் விளையாட பிறந்தவர். எட்டு வயதில் இருந்து மும்பையில் கிரிக்கெட் ஆடி வருகிறார். அவரது கடின உழைப்பை நீங்கள் அனைவரும் காணலாம்" என புகழ்ந்து தள்ளினார்.

சச்சின், சேவாக், லாரா ஒப்பீடு

சச்சின், சேவாக், லாரா ஒப்பீடு

மேலும், சச்சின், சேவாக், பிரையன் லாரா போன்றவர்களுடன் ஒப்பிட்டார் ரவி சாஸ்திரி. "அவரிடம் கொஞ்சம் சச்சின் இருக்கிறார், கொஞ்சம் சேவாக் இருக்கிறார். அவர் களத்தில் நடந்து வரும் போது கொஞ்சம் லாரா கூட இருக்கிறார்" என ஜாம்பவான்களுடன் ஒப்பிட்டார்.

இது சரியல்ல

இது சரியல்ல

ப்ரித்வி ஷாவை அடுத்த சேவாக் எனவும், அடுத்த சச்சின் எனவும் பலரும் ஒப்பிட்டு வருவது சரியல்ல என கங்குலி, கம்பீர், கோலி உள்ளிட்டோர் கூறி இருக்கும் நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளரே ஜாம்பவான்களுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

இப்படி பேசலாமா?

இப்படி பேசலாமா?

சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கியிருக்கும் ஒரு இளம் வீரரை இப்படி ஜாம்பவான்களுடன் ஒப்பிட்டு பேசுவது அழுத்தத்தை அதிகரித்து அவரது விளையாட்டுத் திறனை பாதிக்கும் என்பதே பலரின் எண்ணம். ஆனால், அதற்கு மாறாக அணியின் பயிற்சியாளரே இப்படி புகழ்ந்து வருவதை என்னவென்று சொல்வது? மேலும், ஜாம்பவான்களை ஒப்பிடவும் ஒரு அளவுகோல் வேண்டும். வெறும் இரண்டு போட்டிகள் ஆடிய ஒருவரை இப்படி ஒப்பிடுவது முறையல்ல

வாய்ப்புகள் கிடைக்கும்

வாய்ப்புகள் கிடைக்கும்

ப்ரித்வி ஷா வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தன்னை நிரூபித்து இருக்கும் நிலையில், அவருக்கு அடுத்து நடக்கவுள்ள ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரிலும், ஒருநாள் போட்டிகளிலும் கூட வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.

Story first published: Monday, October 15, 2018, 16:09 [IST]
Other articles published on Oct 15, 2018
English summary
Ravi Shastri says Prithvi Shaw is a bit of Sachin, Sehwag and Lara
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X