For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

1க்கு அப்புறம் 8 முட்டை.. ரவி சாஸ்திரியின் சம்பளத்தை கேட்டு ஆடிப் போன ரசிகர்கள்.. சரமாரி திட்டு!

Recommended Video

Kohli influenced Ravi Shastri | ரவி சாஸ்திரி தேர்வு விவகாரம் :புட்டு புட்டு வைக்கும் ரசிகர்கள்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக சமீபத்தில் பதவி பெற்ற ரவி சாஸ்திரிக்கு சுமார் 10 கோடி வரை சம்பள உயர்வு அளித்து அதிர்ச்சி அளித்துள்ளது பிசிசிஐ.

இந்திய அணி உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த போது ரவி சாஸ்திரி கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். எனினும், அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தது பிசிசிஐ நியமித்த கபில் தேவ் தலைமையிலான குழு.

பணி நீட்டிப்பு

பணி நீட்டிப்பு

இந்த நிலையில், ரவி சாஸ்திரி மற்றும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு பணி நீட்டிப்பு பெற்ற உதவி பயிற்சியாளர்களுக்கு இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத அளவு சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

20 சதவீதம் உயர்வு

20 சதவீதம் உயர்வு

இதற்கு முன் 8 கோடி சம்பளம் பெற்று வந்த ரவி சாஸ்திரி தற்போது 20 சதவீதம் சம்பள உயர்வு பெறுவார் என கூறப்படுகிறது. அதன் படி சுமார் 9 கோடி முதல் 10 கோடி வரை பெறுவார் என தெரிகிறது.

உதவி பயிற்சியாளர்கள் சம்பளம்

உதவி பயிற்சியாளர்கள் சம்பளம்

பந்து வீச்சு பயிற்சியாளராக பணி நீட்டிப்பு பெற்ற பாரத் அருண் மற்றும் பணி நீட்டிப்பு பெற்ற பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதருக்கு 3.5 கோடி சம்பளம் கிடைக்கும். முன்னதாக இவர்கள் 3 கோடிக்கும் குறைவாக சம்பளம் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.

பேட்டிங் பயிற்சியாளர்

பேட்டிங் பயிற்சியாளர்

அதே சமயம், பேட்டிங் பயிற்சியாளராக புதிதாக நியமனம் செய்யப்பட விக்ரம் ரத்தோருக்கு 2.5 கோடி முதல் 3 கோடிக்கு உள்ளே தான் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. பேட்டிங் பயிற்சியாளராக இருந்த சஞ்சய் பங்கர் மட்டுமே உதவி பயிற்சியாளர்களில் பணி நீட்டிப்பு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2021ஆம் ஆண்டு வரை..

2021ஆம் ஆண்டு வரை..

இந்த புதிய சம்பள உயர்வு வரும் செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது. இந்த சம்பளம் ஒரு வருடத்திற்கான சம்பளம். அதன் படி 2௦21 டி20 உலகக்கோப்பை வரை ஆண்டுக்கு இதே அளவு சம்பளம் வழங்கப்படும்.

கேள்வி எழுப்பிய ரசிகர்கள்

கேள்வி எழுப்பிய ரசிகர்கள்

இந்த சம்பள உயர்வை ரசிகர்கள் வரவேற்கவில்லை. ட்விட்டரில் ரசிகர்கள் பலரும் பிசிசிஐ மற்றும் ரவி சாஸ்திரியை விளாசி வருகின்றனர். தான் செய்யும் பணியை சிறப்பாக செய்யாத ஒருவருக்கு எப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பி உள்ளனர்.

வெற்றி பெறவில்லை

இலக்கை அடையாத ஒருவருக்கு தனியார் நிறுவனங்களில் சம்பள உயர்வு வழங்கப்படுமா? என கேள்வி எழுப்பி உள்ளார் இவர். ரவி சாஸ்திரி தலைமையில் இந்திய அணி இருதரப்பு போட்டிகளில் வெற்றி பெற்றாலும், ஐசிசி தொடர்களில் வெற்றி பெறவில்லை என சுட்டிக் காட்டி இருக்கிறார்.

தோல்வி அடைந்தது

உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வி அடைய இருந்தது. கடைசியில் அரை இறுதியில் அணி தோல்வி அடைந்தும் விட்டது. அதற்கு காரணம், நம்ப முடியாத மிடில் ஆர்டர் தான் என்று கூறி உள்ளார்.

ஏன் சம்பள உயர்வு?

ஏன் சம்பள உயர்வு?

மேலும், அதற்கு காரணமான ரவி சாஸ்திரிக்கு பணி நீட்டிப்பு தந்ததோடு, சம்பள உயர்வும் கொடுக்கிறீர்களா? பிசிசிஐ ஏன் இவரை பிடித்துக் கொண்டே இருக்கிறது? என கேட்டு இருக்கிறார் அந்த ரசிகர்.

பொருளாதாரம் வீழ்ச்சியா?

பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததா? யார் சொன்னா? ரவி சாஸ்திரிக்கு 2 கோடி சம்பள உயர்வு கிடைச்சிருக்கு பாருங்க. கடின உழைப்புக்கு காசு கிடைக்கும் என கிண்டல் அடித்துள்ளார் ஒரு ரசிகர்.

Story first published: Monday, September 9, 2019, 19:25 [IST]
Other articles published on Sep 9, 2019
English summary
Ravi Shastri to get 10 crores salary after hike says reports
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X