For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எங்களுக்கு ஓய்வு எல்லாம் தேவையில்லை.. சிறப்பு பயிற்சியில் இறங்கிய ரோஹித், அஸ்வின்

அடிலெய்டு : இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 6 முதல் தொடங்க உள்ளது.

இதற்கு முன்னதாக இந்திய வீரர்கள் பயிற்சிப் போட்டியில் ஆடினர். அடுத்து வலைப் பயிற்சிக்கு ஒரு நாள் ஒய்வு அறிவிக்கப்பட்டது. எனினும், ரோஹித் சர்மா மற்றும் அஸ்வின் மட்டும் சிறப்பு வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.

ஒரு நாள் ஓய்வு

ஒரு நாள் ஓய்வு

பயிற்சிப் போட்டியில் மூன்று நாட்கள் இந்திய வீரர்கள் ஆடினர். அதில் 150 ஓவர்கள் வரை பீல்டிங் மற்றும் பந்துவீச்சில் ஈடுபட்டது இந்திய அணி. இதையடுத்து இந்திய வீரர்களுக்கு வலை பயிற்சிக்கு முன்னர் ஒரு நாள் ஓய்வு அறிவிக்கப்பட்டு இருந்தது.

சிறப்பு பயிற்சியில் அஸ்வின், ரோஹித்

சிறப்பு பயிற்சியில் அஸ்வின், ரோஹித்

ஆனால், டெஸ்ட் போட்டிக்கு நீண்ட காலம் கழித்து களம் இறங்குவோமா என்ற சந்தேகத்தில் இருக்கும் ரோஹித் சர்மாவும், கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் ஆதிக்கம் செலுத்த முடியாத அஸ்வினும் சிறப்பு பயிற்சியில் ஈடுபட்டனர்.

ரவி சாஸ்திரி ஏன்?

ரவி சாஸ்திரி ஏன்?

இந்த சிறப்பு பயிற்சியை ரவி சாஸ்திரி மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் மேற்பார்வை செய்தனர். இந்த பயிற்சி தொடர்பான புகைப்படங்களை பிசிசிஐ சமூக வலைதளங்களில் பதிவிட்டது. சில ரசிகர்கள் ரோஹித் சர்மாவுக்கு இவர்கள் இருவரும் பயிற்சி அளிப்பது வேடிக்கையாக இருப்பதாக கூறி கேலி செய்து இருந்தனர்.

ரோஹித்

ரோஹித்

ரோஹித் சர்மா கடந்த இரண்டு வருடங்களில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். ஒன்று, இரண்டு போட்டிகளில் அவர் சரியாக ஆடவில்லை என கூறி அவரை டெஸ்ட் அணியில் எடுக்கவில்லை. நீண்ட காலம் கழித்து டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார். ஆனால் ,களம் இறங்குவாரா? என்பது சந்தேகமாகவே உள்ளது. எனவே, அவர் சிறப்பு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இஇந்த சிறப்பு பயிற்சியை வைத்தே ரசிகர்கள் முதல் டெஸ்டில் ரோஹித் களம் இறங்குவார் என கூறி வருகிறார்கள்.

துவக்க வீரர் யார்?

துவக்க வீரர் யார்?

மேலும், ப்ரித்வி ஷா காயம் அடைந்துள்ள நிலையில் இந்திய அணியின் துவக்க வீரர்கள் யார் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. பயிற்சியில் முரளி விஜய் சதம் அடித்துள்ள நிலையில் அவரது இடம் கிட்டதட்ட உறுதியாகி உள்ளது. மற்றொரு இடத்தை ரோஹித் அல்லது ராகுல் நிரப்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

அஸ்வினுக்கு அணிக்குள் கடும் போட்டி

அஸ்வினுக்கு அணிக்குள் கடும் போட்டி நிலவுகிறது. ஜடேஜா, குல்தீப் என இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் அணிக்குள் இடம் பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர். மேலும், ஹனுமா விஹாரி பகுதி நேர சுழற் பந்துவீச்சாளராக இருப்பதும் அஸ்வினுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. அதனால், அவரும் சிறப்பு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Story first published: Monday, December 3, 2018, 17:37 [IST]
Other articles published on Dec 3, 2018
English summary
Rohit sharma and Ashwin engaged in a special training session in Adelaide. Ravi Shastri was also present in the session.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X