சர்வதேச டி20 போட்டியை உடனே நிறுத்துங்கள்.. ரவி சாஸ்த்ரி கொடுத்த ஷாக் ஐடியா.. இது கரெக்டா இருக்குமா?

மும்பை: சர்வதேச இருத்தரப்பு டி20 தொடர்களை ஐசிசி உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐபிஎல் தொடர்பாக நடைபெற்ற கருத்தரங்கில் ரவி சாஸ்த்ரி, டேனியல் விட்டோரி, ஆகாஷ் சோப்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது, பேசிய ரவி சாஸ்த்ரி ஐபிஎல் பெரும் லாபத்தை அளிக்க கூடிய வர்த்தகமாக மாறிவிட்டதாக தெரிவித்தார்.

தோனியின் மனசு இருக்கே.. வேற லெவல்!! சென்னையில் ரசிகருக்காக தல செய்த காரியம்.. குவியும் பாராட்டுதோனியின் மனசு இருக்கே.. வேற லெவல்!! சென்னையில் ரசிகருக்காக தல செய்த காரியம்.. குவியும் பாராட்டு

2 முறை வேண்டும்

2 முறை வேண்டும்

மேலும் பேசிய அவர், ஐபிஎல் போட்டியை ஆண்டுக்கு 2 முறை நடத்த வேண்டும். இல்லையெனில் 6 மாதங்கள் வரை நடத்த வேண்டும். என்னை கேட்டால், சர்வதேச இருதரப்பு டி20 தொடர்களை ஐசிசி உடனடியாக நிறுத்த வேண்டும். இருத்தரப்பு டி20 தொடர் தேவையில்லாதவை. கால்பந்து போல், டி20 உலகக் கோப்பை தொடரை மட்டும் அனைத்து அணிகளும் இணைந்து 2 ஆண்டுக்கு ஒரு முறை விளையாட வேண்டும்.

நியாபகம் இல்லை

நியாபகம் இல்லை

இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த 6 ஆண்டுகளில் இந்தியா பங்கேற்று விளையாடிய ஒரு டி20 தொடர் கூட எனக்கு நியாபகம் இல்லை. ரசிகர்களுக்கும் இது போன்ற டி20 தொடர் சோர்வை தான் தரும். அதற்கு பதிலாக இனி வரும் காலங்களில் இரு தரப்பு தொடரை குறைத்து கொண்டு ஐபிஎல் போன்ற தொடர்களை அதிகளவு நடத்த வேண்டும்.

140 போட்டிகள்

140 போட்டிகள்

அனைத்து நாடுகளும் தங்களது உள்நாட்டு கிரிக்கெட் போட்டியை ஐபிஎல் போன்ற பிரான்சைஸ் கிரிக்கெட்டாக மாற்ற வேண்டும். தற்போது ஐபிஎல் தொடரில் 70 போட்டிகள் நடைபெறுகிறது என்றால், அடுத்த ஆண்டு 140 போட்டிகளை இரு பகுதியாக நடத்த வேண்டும். அதற்கான நேரத்தை ஐசிசி வழங்கினால், அனைத்து நாட்டு வீரர்களும் இதில் பங்கேற்பார்கள். கிரிக்கெட் அதிகமாக நடந்தால் போர் அடிக்கும் என்ற கேள்விக்கே இடமில்லை. இந்தியாவில் எது கொடுத்தாலும், அதை பார்க்க ஒரு கூட்டம் இருக்கும்.

IPL 2022-ல் CSK-வில் என்ன பிரச்சனை.. Ravi Shastri சொன்ன காரணம் #Cricket | Oneindia Tamil
ஏன்பிஏ போல் மாற்றம்

ஏன்பிஏ போல் மாற்றம்

இந்த நிகழ்ச்சியில் பேசிய இயன் பிஷப், என்.பி.ஏ. போன்ற அமெரிக்க கூடைப்பந்து தொடரில் ஒரு சீசனில் ஒவ்வொரு அணியும் 70 போட்டிகள் விளையாடுகின்றன, வாரம் வாரம் விடுமுறை கிடைக்கும். அதே போல் ஐபிஎல் போட்டியையும் கொண்டு வர வேண்டும் என்றார். ஐபிஎல் மூலம் கிரிக்கெட் வீரர்கள், அணி நிர்வாகிகள், பயிற்சியாளர்களின் ஊதியம் உயரும் என்று விட்டோரி கூறினார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Ravi Shastri wants to end bilateral t20 series and discussed about future of IPL சர்வதேச டி20 போட்டியை உடனே நிறுத்துங்கள்.. ரவி சாஸ்த்ரி கொடுத்த ஷாக் ஐடியா.. இது கரெக்டா இருக்குமா?
Story first published: Wednesday, June 1, 2022, 13:38 [IST]
Other articles published on Jun 1, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X