For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20யின் செம சொத்து அஸ்வின்.. அவரைப் போய் விட்டுட்டீங்களே.. கவலைப்படும் கைஃப்!

டெல்லி : ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரின் டெஸ்ட் வடிவத்தில் மட்டுமே ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெற்றுள்ளார்.

கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக 15 போட்டிகளில் பங்கேற்று விளையாடிய அஸ்வின் 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் ஒரு ஓவரில் 7.66 ரன்களை மட்டுமே சராசரியாக கொடுத்துள்ளார்.

இந்நிலையில் டி20 வடிவத்தின் மதிப்பு மிக்க சொத்து அஸ்வின் என்றும் அவருக்கு அந்த வடிவத்தில் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் டெல்லி அணியின் தலைமை கோச் முகமது கையிஃப் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் தொடரில் அஸ்வின்

டெஸ்ட் தொடரில் அஸ்வின்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெற்றுள்ளார். ஆனால் ஒருநாள் மற்றும் டி20 வடிவங்களில் அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்நிலையில், டி20 வடிவத்தின் மதிப்புமிக்க சொத்து அஸ்வின் என்று அவரின் டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் முகமது கையிஃப் தெரிவித்துள்ளார்.

அஸ்வின் குறித்து கையிஃப் பாராட்டு

அஸ்வின் குறித்து கையிஃப் பாராட்டு

ஐபிஎல் 2020 சீசனில் விராட் கோலி, ரோகித் சர்மா, பொல்லார்ட், கெயில், வார்னர், குவின்டன் டீ காக், பட்லர், ஸ்மித், படிக்கல், பூரன் போன்றவர்களின் விக்கெட்டுகளை பவர்-ப்ளேவில் வீழ்த்தியதை சுட்டிக் காட்டிய முகமது கையிஃப், அஸ்வின் சர்வதேச டி20 வடிவத்தின் மதிப்பு மிக்க சொத்து என்று தெரிவித்துள்ளார்.

எகானமி ரேட் 7.66

எகானமி ரேட் 7.66

டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக முதல் முறையாக ஐபிஎல் 2020 சீசனில் களமிறங்கிய அஸ்வின், 15 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் அவரது ஓவர்களின் எகானமி ரேட் 7.66ஆக உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடிவரும் அஸ்வின் கடந்த 2017 முதல் குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டில் இடம்பெறவில்லை.

இளம் வீரர்களுக்கு உதவி

இளம் வீரர்களுக்கு உதவி

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ள அஸ்வின், அதற்காக தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் மற்ற வீரர்களுக்கும் பயிற்சிகளில் உதவி செய்து வருகிறார். சமீபத்தில் குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டிற்காக கே.எல். ராகுலுக்கு அவர் உதவிய வீடியோவை பிசிசிஐ வெளியிட்டது.

Story first published: Thursday, November 19, 2020, 13:04 [IST]
Other articles published on Nov 19, 2020
English summary
Ashwin will next be seen in action during the four-Test series in Australia
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X