32 விக்கெட்கள்.. ஜாம்பவான்களால கூட முடியலயாம்...புதிய சாதனையை படைத்த அஸ்வின்

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அசத்தியதன் மூலம் அஸ்வின் மேலும் ஒரு வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இதற்கு இந்திய அணியின் ஆல்ரவுண்டர் முக்கிய காரணமாக அமைந்தார்.

கலக்கல் இந்திய வீராங்கனைகள்... ஐசிசி ஒருநாள் தரவரிசை.. முதல் 10 இடங்களில் 4 பௌலர்கள்!

இந்நிலையில் டெஸ்ட் தொடரில் அசத்தியதன் மூலம் 2 முக்கிய சாதனைகளை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார்.

 படுதோல்வி

படுதோல்வி

இந்தியா - இங்கிலாந்து மோதிய 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3 - 1 என அபார வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி சிறப்பாக ஆடிய நிலையில் கடைசி 3 போட்டிகள் ரன் குவிக்க மிகவும் திணறியது. அவர்களின் ரன் குவிப்புக்கு முக்கிய அச்சுறுத்தலாக இருந்தது ரவிச்சந்திரன் அஸ்வின் ஆவார்.

நாயகன்

நாயகன்

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அஸ்வினுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இது அஸ்வினின் 8வது தொடர் நாயகன் விருதாகும். இதன் மூலம் தொடர் நாயகன் விருதை அதிகம் பெற்றவர்கள் பட்டியலில் அவர் 6ம் இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் முத்தையா முரளிதரன் 11 முறை பெற்றும், காலிஸ் 9 முறை என முதல் 2 இடங்களில் உள்ளனர்.

விக்கெட்

விக்கெட்

இந்த டெஸ்ட் தொடரில் அஸ்வின் 32 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ஒரு டெஸ்ட் தொடரில் இவர் எடுக்கும் அதிக விக்கெட் இதுவாகும். இதற்கு முன்னர் 2015ல் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக எடுத்தார். மேலும் ஒரு டெஸ்ட் தொடரில் 30க்கும் அதிகமான விக்கெட்களை 2 முறை எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார். ஹர்பஜன், கபில் தேவ் உள்ளிட்டோரே ஒரு முறை தான் எடுத்துள்ளனர்.

அஸ்வின் மகிழ்ச்சி

அஸ்வின் மகிழ்ச்சி

ஆட்டத்தின் பின்னர் பேசிய அஸ்வின், இந்த டெஸ்ட் தொடரில் வென்றோம் என்பதை விட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு நாங்கள் தகுதி பெற்றுள்ளோம் என்பதே முக்கியமான ஒன்று. இந்த தொடரில் ஒவ்வொரு முறையும் ஒரு சவாலான நேரம் இருந்தபோது, ​​யாரோ ஒருவர் கைகொடுத்தோம், அதனால்தான் இந்த வெற்றி கிடைத்தது என தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Ravichandran Ashwin creates new record with his 32 wickets against England Series
Story first published: Sunday, March 7, 2021, 13:11 [IST]
Other articles published on Mar 7, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X