For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா மீது குவியும் பிட்ச் குற்றச்சாட்டுக்கள்.. அஸ்வின் தரமான பதிலடி.. அட இது நல்லா இருக்கே!

சென்னை: இந்தியாவில் உள்ள பிட்ச்-கள் நியாயமின்றி ஒருதலைபட்சமாக உருவாக்கப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் குற்றம்சாட்டி வரும் சூழலில் ரவிச்சந்திரன் அஸ்வின் தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் பிப்ரவரி 9ம் தேதி முதல் நாக்பூரில் தொடங்குகிறது. இந்த தொடர் வரும் மார்ச் 13ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

மிகவும் புகழ்பெற்ற பார்டர் கவாஸ்கர் தொடர் இந்தாண்டுடன் முழுமையாக நிறுத்தப்படவுள்ளதால் உச்சகட்ட மோதலை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

“சாதனையாளருக்கு வாய்ப்பு இல்லையாம்”.. புறகணிக்கப்பட்ட ஷிகர் தவான்.. அஸ்வின் சரமாரி கேள்வி! “சாதனையாளருக்கு வாய்ப்பு இல்லையாம்”.. புறகணிக்கப்பட்ட ஷிகர் தவான்.. அஸ்வின் சரமாரி கேள்வி!

அநியாயம்

அநியாயம்

போட்டி தொடங்க இன்னும் ஒரு வாரத்திற்கும் மேல் உள்ள சூழலில் தற்போதே சர்ச்சை கிளம்பியுள்ளது. ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் இயான் ஹீலி அளித்த பேட்டியில், " இந்தியாவில் நியாயமான முறையில் பிட்ச்-களை கொடுத்தால் நன்றாக இருக்கும். அதாவது பேட்ஸ்மேன்களுக்கு நன்கு உதவக்கூடியதாகவும், ஒரே மாதிரியான ஸ்பின் இருக்கும் வகையிலும் கொடுக்க வேண்டும், ஒருவேளை நியாயமாக நடந்துக்கொண்டால் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் எனக்கூறினார்.

பிட்ச் பிரச்சினை

பிட்ச் பிரச்சினை

இதுமட்டுமல்லாமல், ஆஸ்திரேலிய அணி பயிற்சி போட்டிகளை ரத்து செய்ததற்கும் குற்றச்சாட்டு இருந்தது. அதாவது இந்தியாவில் பயிற்சியின் போது தரப்படும் பிட்ச்-க்கும், நிஜ போட்டியில் தரப்படும் பிட்ச்-க்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதால் நேரத்தை வீணடிக்க தயாராக இல்லை என ஆஸ்திரேலிய வீரர்களே கூறியிருந்தனர்.

 அஸ்வின் தந்த பதில்

அஸ்வின் தந்த பதில்

இந்நிலையில் இதற்கெல்லாம் அஸ்வின் பதிலடி கொடுத்துள்ளார். அதில், ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இந்தியாவில் சௌகரியம் இல்லை எனக்கூறியிருந்தார். ஆனால் ஆஸ்திரேலியாவிலும் பயிற்சி போட்டியில் தரக்கூடிய பிட்ச்-ம் நிஜ போட்டியில் தரக்கூடிய பிட்ச்-ம் ஒன்றாக இருப்பதில்லை. இது பார்டர் கவாஸ்கர் கோப்பை என்ற பெரிய தொடராகும். இதுகுறித்து பலரும் பல விஷயங்களை கூற தான் செய்வார்கள். ஏன்? எதிரணி வீரர்களே நிறைய விமர்சனத்தை கூறலாம். சகஜமான ஒன்றுதான்.

 பயிற்சி முறைகள்

பயிற்சி முறைகள்

ஆஸ்திரேலிய அணி பயிற்சி போட்டியை வேண்டாம் எனக்கூறிவிட்டது. ஏனென்றால் 3 - 4 டெஸ்ட் போட்டிகளுக்காக ஒரு மாதத்திற்கு மேல் அவர்கள் ஒரு நாட்டில் இருக்க விரும்பவில்லை. எனவே பயிற்சி போட்டிக்காக 4 நாட்களை செலவளிக்காமல், அதே போன்ற ஒரு களத்தை வேறு இடத்தில் உருவாக்கி அங்கு பயிற்சி பெற நினைக்கின்றனர். அதுவும் அவர்கள் நாட்டில் இருந்தே செய்ய விரும்புகின்றனர். இது தான் காரணம் என அஸ்வின் கூறியுள்ளார்.

Story first published: Friday, February 3, 2023, 18:02 [IST]
Other articles published on Feb 3, 2023
English summary
Star spinner Ravichandran ashwin gives answers for the Pitch controversies in India ahead of border gavaskar trophy
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X