திரும்பவும் விளையாட வர்றாராம் டெல்லி கேபிடல்ஸ் ஸ்பின்னர்... டீம் காத்துக்கிட்டு இருக்கு சார்!

டெல்லி : ஐபிஎல் 2021 தொடரின் டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் ஆர் அஸ்வின் இதுவரை இந்த சீசனில் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

அவர் ஒரு விக்கெட்டை மட்டுமே இந்த சீசனில் வீழ்த்தியுள்ளார். ஆயினும் ரன்களை சுருக்கினார்.

கொரோனா பீதி... புது முடிவு எடுத்துருக்கற பிசிசிஐ... பர்மிஷனுக்காக மட்டும்தான் வெயிட்டிங்காம்!

இந்நிலையில் கொரோனாவில் பாதிக்கப்பட்ட தன்னுடைய குடும்பத்தினருடன் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து தெரிவித்த அவர், தொடரிலிருந்து நீங்கினார்.

கடந்த தொடர்களில் அதிரடி

கடந்த தொடர்களில் அதிரடி

ஐபிஎல் 2021 தொடரின் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடிவந்த ஆர் அஸ்வின் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடி 7 ரன்களையும் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார். கடந்த தொடர்களில் அதிரடியை வெளிப்படுத்தி அஸ்வினின் இந்த ஆண்டு ஐபிஎல் ஆட்டம் மெதுவாகவே இருந்தது.

ஐபிஎல்லில் இருந்து நீங்கிய அஸ்வின்

ஐபிஎல்லில் இருந்து நீங்கிய அஸ்வின்

ஆயினும் அவர் எதிரணி பௌர்களின் ரன்களை சில போட்டிகளில் சுருக்கினார். தொடர்ந்து பார்மிற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அணியிலிருந்து விலகினார். தன்னுடைய குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு இந்த நேரத்தில் தன்னுடைய ஆதரவு தேவை எனவும் அவர் கூறியிருந்தார்.

அஸ்வின் பங்கேற்கிறார்

அஸ்வின் பங்கேற்கிறார்

அவரது குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா பாதித்திருந்தததாக அவரது மனைவி பின்னர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது அஸ்வின் இறுதி கட்ட ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. அடுத்தகட்ட ஐபிஎல் போட்டிகளை மும்பையில் நடத்தி முடிக்க ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா பரிசோதனைகள்

கொரோனா பரிசோதனைகள்

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் அஸ்வின் மீண்டும் இணையும் பட்சத்தில் அவர் மும்பையில் 7 நாட்கள் குவாரன்டைனை முடித்துவிட்டு கொரோனா டெஸ்ட்களிலும் தேற வேண்டும். இதையடுத்தே அவர் மீண்டும் அணியில் இணைந்து விளையாட முடியும்.

சிறப்பான டெல்லி அணி

சிறப்பான டெல்லி அணி

கடந்த சீசனில் சிறப்பான போட்டிகளை டெல்லி கேபிடல்ஸ் அணி விளையாடியது. கடந்த சீசனில் தான் அஸ்வினும் அணியில் இணைந்திருந்தார். இதையடுத்து முதல் முறையாக கடந்த சீசனில் அந்த அணி இறுதிப்போட்டி வரை விளையாடி மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. இந்நிலையில் இந்த சீசனில் ரிஷப் தலைமையில் அந்த அணி சிறப்பாக விளையாடி வருகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
R Ashwin is currently on a break from IPL 2021 with several members of his family suffering from coronavirus
Story first published: Tuesday, May 4, 2021, 12:12 [IST]
Other articles published on May 4, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X