பாதி மீசை எடுத்துட்டு மைதானத்துல விளையாட வர்றேன்... அஸ்வின் ஓபன் சேலஞ்ச் யாருக்கு?

சென்னை : இந்திய டெஸ்ட் போட்டிகளின் நவீன தூணாக விமர்சிக்கப்படும் சத்தீஸ்வர் புஜாராவிற்கு ஸ்பின்னர் ரவி அஸ்வின் ஓபன் சேலஞ்ச் ஒன்றை வைத்துள்ளார்.

கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி புஜாரா இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார்.

ஆடிப்போன மைதானம்.. யார்யா இவரு இப்படி பவுலிங் போடுறாரு.. மிரள வைத்த வீரர்.. கோபம்தான் காரணம்!

தொடர்ந்து ஆஸ்திரேலிய பௌலர்களின் பந்து வீச்சால் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்ட போதிலும் நிலையான தனது ஆட்டத்தின் மூலம் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார் புஜாரா.

சிறப்பான புஜாரா

சிறப்பான புஜாரா

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார் சத்தீஸ்வர் புஜாரா. தான் மட்டும் ரன்களை குவிப்பதை கவனத்தில் கொள்ளாமல், அணியின் வெற்றியை கவனத்தில் கொண்டு இளம் வீரர்களுக்கு சிறப்பாக கைகொடுத்து பார்ட்னர்ஷிப் மூலம் ரன்குவிப்பை செய்தார்.

தாக்குதலுக்கு உள்ளான புஜாரா

தாக்குதலுக்கு உள்ளான புஜாரா

இந்த தொடரின் 4வது மற்றும் இறுதிப்போட்டியில் அரைசதம் அடித்த புஜாராவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. அவுட்டாகாமல் நிலையாக மைதானத்தில் இருந்து வெற்றியை இந்திய அணிக்கு பரிசளித்தார். மேலும் இந்த போட்டியின்போது தலை, கை உள்ளிட்ட 10 இடங்களில் தாக்குதலுக்கு உள்ளானார்.

அஸ்வின் பாராட்டு

அஸ்வின் பாராட்டு

புஜாராவின் இந்த ஆட்டம் தொடர்ந்து பாராட்டுதலுக்கு உள்ளாகி வருகிறது. அவர் இந்தியாவின் நவீன கிரிக்கெட்டின் தூணாக கருதப்படுகிறார். இந்நிலையில் தனது யூடியூப் பக்கத்தில் இந்திய பேட்டிங் கோச் விக்ரம் ரத்தோருடன் பேசிய ரவி அஸ்வின் புஜாராவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாதி மீசையை எடுப்பதாக சவால்

பாதி மீசையை எடுப்பதாக சவால்

மேலும் புஜாராவிற்கு ஓபன் சேலஞ்ச் ஒன்றையும் செய்துள்ளார். அடுத்து வரவுள்ள இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மொயின் அலி உள்ளிட்ட ஸ்பின்னர்களின் பந்துவீச்சை எதிர்கொண்டு ஓவர் த டாப் அடித்து ஆடினால் தன்னுடைய பாதி மீசையை எடுத்துவிட்டு தான் மைதானத்தில் விளையாடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
I'm trying to convince him that at least once go over the top -Ashwin
Story first published: Tuesday, January 26, 2021, 14:19 [IST]
Other articles published on Jan 26, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X