For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணி தோற்றால் என்ன? இந்திய வீரர் தோற்கவில்லை.. டெஸ்ட் சாம்பியன்ஷிப்-ல் வரலாற்று சாதனை படைப்பு

சவுத்தாம்டன்: டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை புத்தகத்தில் இந்திய நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற்றுள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நேற்று நடந்து முடிந்தது.

22 வீரர்களுமே வெற்றியாளர்கள் தான்.. கேன் வில்லியம்சனின் பெருந்தன்மை.. பாராட்டி தள்ளும் நெட்டிசன்கள்!22 வீரர்களுமே வெற்றியாளர்கள் தான்.. கேன் வில்லியம்சனின் பெருந்தன்மை.. பாராட்டி தள்ளும் நெட்டிசன்கள்!

இதில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றுள்ளது,

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்

டெஸ்ட் கிரிக்கெட் மீதான மோகம் ரசிகர்களிடையே குறைந்து வருவதால், அதனை பிரபலப்படுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை கொண்டு வந்தது. கடந்த 2019ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த இதன் முதல் சீசனில் நியூசிலாந்து அணி கோப்பையை வென்று அசத்தியுள்ளது. இந்திய அணி கடும் போராட்டத்திற்கு பின்னர் தோல்வியை சந்தித்தது.

பவுலிங் சாதனை

பவுலிங் சாதனை

இந்நிலையில் இந்திய அணி தோற்றாலும், இந்திய வீரர் அஸ்வின் பெருமை தேடி கொடுத்துள்ளார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் லெக் ஸ்பின்னர் அஸ்வின் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இந்த தொடரில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 71 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இறுதிப்போட்டியில் கூட 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

பவுலிங் பட்டியல்

பவுலிங் பட்டியல்

இந்த தொடரில் 4 முறை 5 விக்கெட் ஹௌல் ( ஒரே போட்டியில் 5 விக்கெட் எடுப்பது) எடுத்து அசத்தியுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் 14 போட்டிகளில் விளையாடி 70 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்த பட்டியலில் ஸ்டூவர் பிராட், டிம் சவுத்தி, நாதன் லயான் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

பேட்டிங் பட்டியல்

பேட்டிங் பட்டியல்

பேட்டிங்கை பொறுத்தவரை ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாப்ஸங்னே 13 போட்டிகளில் விளையாடி 1,676 ரன்களை எடுத்து முதலிடம் வகிக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக இங்கிலாந்தின் ஜோ ரூட் 20 போட்டிகளில் விளையாடி 1,660 ரன்கள் எடுத்து 2ம் இடம் வகிக்கிறார். இந்த டாப் 5 பட்டியலில் ஒரே ஒரு இந்திய வீரராக ரஹானே மட்டுமே இடம் பிடிதுள்ளார். இந்த தொடரில் 18 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1,174 ரன்கள் அடித்து 5ம் இடத்தில் உள்ளார். ஸ்டீவ் ஸ்மித் ( 1,341 ரன்கள்), பென் ஸ்டோக்ஸ் (1334 ரன்கள்) 2 மற்றும் 3ம் இடத்தில் உள்ளனர்.

Story first published: Thursday, June 24, 2021, 21:35 [IST]
Other articles published on Jun 24, 2021
English summary
Indian Spinner Ravichandran Ashwin Sets a record of leading wicket-taker in WTC 2019-21 cycle
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X