For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

VIDEO: திருந்தாத அஸ்வின்… சாஹாவை 2 முறை மன்கட் செய்ய முயற்சி… வெளுத்து கட்டிய அம்பயர்

ஹைதராபாத்:சன் ரைசர்ஸ் துவக்க வீரர் சாஹாவை இருமுறை மன்கட் செய்ய முயற்சித்த அஸ்வினை அம்பயர் கடுமையாக எச்சரித்தார்.

ஐபிஎல் தொடரின் லீக் போட்டி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு இடையே ஹைதராபாத்தில் தொடங்கியது.

ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் தொடங்கிய இப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் இரு அணிகளும் முடிவு செய்துள்ளன. ஏனென்றால், இந்த ஐபிஎல் தொடரில் இரண்டு அணிகளும் தலா 11 போட்டிகளில் விளையாடி அதில் 5 போட்டிகளை வென்றுள்ளன.

முதலில் பந்துவீச்சு

முதலில் பந்துவீச்சு

எனவே இன்றையப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ப்ளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு அதிகரிக்கும். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்றன. அந்த அணியின் கேப்டன் அஸ்வின் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

சிறப்பான துவக்கம்

சிறப்பான துவக்கம்

ஹைதராபாத் அணியில் அபிஷேக், நபி மற்றும் சந்தீப் ஆகியோர் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளனர். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு வழக்கம் போல டேவிட் வார்னர் மற்றும் விருத்திமான் சஹா ஆகியோர் சிறப்பான துவக்கம் கொடுத்தனர்.

முயற்சிகள் தோல்வி

முயற்சிகள் தோல்வி

போட்டியின் முதல் ஓவரில் இருந்தே அதிரடியாக விளையாடிய இருவரின் விக்கெட்டை இழக்க பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.

தந்திரமான அஸ்வின்

தந்திரமான அஸ்வின்

அதனால், வழக்கம் போல தனது தந்திரமான முறையை கையில் எடுக்க முடிவு செய்தார் அஸ்வின். சாஹாவை ஒரே ஓவரில் இரண்டு முறை மன்கட் செய்ய முயற்சித்தார்.

அம்பயர் எச்சரிப்பு

ஆனால் அஸ்வினின் நடவடிக்கையை உன்னிப்பாக கவனித்து வந்த சாஹா க்ரீஸை விட்டு வெளியேறவில்லை. இதனால் அஸ்வின் பெருத்த ஏமாற்றம் அடைந்தார். அதை கண்ட கடுப்பான அம்பயரும் அஸ்வினை கடுமையாக எச்சரித்தார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Story first published: Monday, April 29, 2019, 23:05 [IST]
Other articles published on Apr 29, 2019
English summary
Ravichandran ashwin tries to mankad wriddhiman saha twice, Fails Miserably.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X