ஐபிஎல்-ல மட்டும் மாஸ் இல்ல.. எங்கேயும் அடிப்பேன்.. கெத்து காட்டிய ஜடேஜா - ரசித்த கோலி

சவுத்தாம்ப்டன்: ரவீந்திர ஜடேஜாவின் ஃபார்ம் இன்னமும் டாப் லெவலில் உள்ளது என்பதற்கு இதைவிட ஒரு கண்கூடான ஆதாரம் இருக்காது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, வரும் ஜூன் 18ம் தேதி தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

இதற்காக வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, இந்திய அணி இன்ட்ரா - ஸ்குவாட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது.

இரண்டு அணிகளாக

இரண்டு அணிகளாக

அதென்ன இன்ட்ரா - ஸ்குவாட் கிரிக்கெட்? பொதுவாக முக்கியமான டெஸ்ட் தொடர் அல்லது ஒருநாள் தொடர்களுக்கு முன்பாக, அணிகள் தங்களுக்குள் இரண்டு அணிகளாக பிரிந்து கிரிக்கெட் ஆடுவது தான் இன்ட்ரா - ஸ்குவாட் கிரிக்கெட். அதற்கு இரு கேப்டன்கள், குறிப்பிட்ட ஓவர்கள் என்று சீரியஸான மேட்ச்சாகவே விளையாடுவார்கள்.

முக்கிய போட்டி

முக்கிய போட்டி

அதுபோல தான் தற்போது சவுத்தாம்ப்டன் நகரில் இந்திய அணி நான்கு நாட்களுக்கு இன்ட்ரா - ஸ்குவாட் கிரிக்கெட்டில் விளையாடி விளையாடி வருகிறது. இத்தனை நாட்களாக இங்கிலாந்தில் கடுமையான குவாராண்டைனில் இருந்த இந்திய அணிக்கு பயிற்சிப் போட்டிகள் என்று எதுவுமில்லை. எனவே, இந்த இன்ட்ரா - ஸ்குவாட் கிரிக்கெட் அவர்களது திறனை, ஃபார்மை சோதிக்கும் முக்கிய போட்டியாக பார்க்கப்படுகிறது.

அரைசதம் ஜடேஜா

அரைசதம் ஜடேஜா

இதில், ரிஷப் பண்ட சதம் 94 பந்துகளில் 124 ரன்கள் விளாச, ஷுப்மன் கில் 135 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார். அதேபோல், ரவீந்திர ஜடேஜா 76 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். ஜடேஜாவின் இந்த அரைசதம் நிச்சயம் இந்திய அணிக்கு சாதகமான அம்சமாகும். ஏனெனில், இந்திய அணியில் ஃபாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டர் இத்தொடரில் இல்லை. ஆகையால், ஜடேஜா, அஷ்வின் ஆகிய இரு ஸ்பின் பவுலிங் ஆல் ரவுண்டர்களை தான் கோலி பெரிதும் நம்பியிருக்கிறார்.

மொத்த ரன்கள்

மொத்த ரன்கள்

இதில், இந்திய அணியின் லோ-ஆர்டரில் முதுகெலும்பாக இருக்கப் போகும் இரு வீரர்களில் ஒருவர் ரிஷப் பண்ட், மற்றொருவர் ரவீந்திர ஜடேஜா. உள்ளூரில் டெஸ்ட் கிரிக்கெட்டில், முச்சதம் வரை விளாசியவர் ஜடேஜா. நல்ல ஆவரேஜ் வைத்திருக்கிறார். விக்கெட்டுகளை கூட. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 51 போட்டிகளில் ஆடியுள்ள ஜடேஜா, மொத்தம் அடித்துள்ள ரன்கள் 1,954. ஆவரேஜ் 36.18. பெஸ்ட் ஸ்கோர் 100 (நாட் அவுட்).

இரண்டு அரைசதம்

இரண்டு அரைசதம்

அதுவே, வெளிநாடு டெஸ்ட் தொடர்களில் அவர் மொத்தம் 18 போட்டிகளில் விளையாடி, 748 ரன்கள் எடுத்திருக்கிறார். ஆவரேஜ் 32.52. பெஸ்ட் ஸ்கோர் 86( நாட் அவுட்). குறிப்பாக, இங்கிலாந்தில் அவர் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 276 ரன்கள் எடுத்திருக்கிறார். அவர் அடித்த 86* பெஸ்ட் ஸ்கோர் இங்கிலாந்தில் தான். இரண்டு அரைசதம் அடித்திருக்கிறார்.

பெஸ்ட் 4/79

பெஸ்ட் 4/79

பந்துவீச்சைப் பொறுத்தவரை, இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் 233 ஓவர்கள் வீசியிருக்கிறார். அதில் 28 மெய்டன் ஓவர்கள். 16 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். பெஸ்ட் 4/79. ஒட்டுமொத்தமாக பார்க்கையில், இங்கிலாந்தில் ஓரளவு டீசண்ட்டான கிரிக்கெட்டை அவர் ஆடியிருக்கிறார். குறிப்பாக, இந்த சீசனில் ஜடேஜாவின் ஃபார்ம் உச்சத்தில் இருக்கிறது. அதை மீண்டும் நிரூபிக்கும் வகையில், ஜடேஜா இன்ட்ரா ஸ்குவாட் ஆட்டத்தில் அரைசதம் அடிக்க, கோலி - சாஸ்திரி காம்போ ஹேப்பி அண்ணாச்சி மோடில் உள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
jadeja 50 in intra-squad match wtc final - ரவீந்திர ஜடேஜா
Story first published: Monday, June 14, 2021, 10:20 [IST]
Other articles published on Jun 14, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X