For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மாஸ்க் எங்கே? ஜடேஜா வண்டியை நிறுத்திய லேடி கான்ஸ்டபிள் மருத்துவமனையில் அனுமதி.. பரபரப்பு!

ராஜ்கோட் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ரவீந்திர ஜடேஜா மற்றும் அவரது மனைவி காரில் சென்ற போது அதை நிறுத்தி இருக்கிறார் ஒரு பெண் கான்ஸ்டபிள்.

Recommended Video

மாஸ்க் எங்கே? கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் காரை நிறுத்திய லேடி கான்ஸ்டபிள்

ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா முகக் கவசம் அணியவில்லை என கூறப்படுகிறது.

அதன் காரணமாக ரவீந்திர ஜடேஜா மற்றும் அவரது மனைவி அந்த கான்ஸ்டபிளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ஜடேஜா, புஜாராவுக்கு நோட்டீஸ்.. ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் அதிரடி.. பரபர தகவல்!ஜடேஜா, புஜாராவுக்கு நோட்டீஸ்.. ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் அதிரடி.. பரபர தகவல்!

புகார் அளிக்கவில்லை

புகார் அளிக்கவில்லை

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இரு தரப்பிலும் எந்த புகாரும் அளிக்கப்படாத நிலையில், முகக் கவசம் அணியாதது குறித்து கேட்ட அந்த பெண் கான்ஸ்டபிள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனால், மேலும் பரபரப்பு அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் பலி எண்ணிக்கை 45,000த்தை கடந்துள்ளது. 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் இடையே சமூக இடைவெளி, முகக் கவசம் ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அபராதம்

அபராதம்

முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. இன்னும் சில நாட்களில் ஐபிஎல் தொடருக்காக ச்கேன்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைய உள்ள கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, தன் மனைவியுடன் தன் சொந்த ஊரான ராஜ்கோட்டில் காரில் வெளியே சென்றுள்ளார்.

காரை நிறுத்திய கான்ஸ்டபிள்

காரை நிறுத்திய கான்ஸ்டபிள்

அப்போது ஜடேஜாவின் மனைவி ரிவாபா முகக் கவசம் அணியவில்லை என கூறப்படுகிறது. அதைக் கண்ட கான்ஸ்டபிள் சோனால் கோசாய் என்பவர் கிசன்பாரா சவுக் என்ற பகுதியில் இரவு 9 மணி அளவில் அவர்கள் வந்த காரை நிறுத்தி உள்ளார்.

வாக்குவாதம்

வாக்குவாதம்

ரிவாபா முகக் கவசம் அணியாதது குறித்து கேட்டுள்ளார். அதன் பின் அபாராதம் செலுத்துமாறு கான்ஸ்டபிள் சோனால் கூறியதாகவும், அப்போது ரவீந்திர ஜடேஜா மற்றும் அவரது மனைவி ரிவாபா அவருடன் வாக்குவாதம் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

பெரும் பரபரப்பு

பெரும் பரபரப்பு

இந்த சம்பவம் குறித்த தகவல் உடனடியாக ஊடகங்களில் வெளியானது. அதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், இரு தரப்பிலும் யார் மீதும் நேரடி புகார் அளிக்கப்படவில்லை. இது பற்றி டெபுடி கமிஷனர் மனோகர்சின் ஜடேஜா விளக்கம் அளித்தார்.

விசாரித்து வருகிறோம்

விசாரித்து வருகிறோம்

டெபுடி கமிஷனர் கூறுகையில், மோசமாக நடந்து கொண்டதாக இரு தரப்பிலும் கூறி உள்ளனர். யாரும் அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்கவில்லை. எனக்கு கிடைத்த தகவல்படி ஜடேஜா முகக் கவசம் அணிந்து இருந்தார். அவரது மனைவி முகக் கவசம் அணிந்து இருந்தாரா? என்பது குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம்" என்றார்.

மருத்துவமனையில் சோனால்

மருத்துவமனையில் சோனால்

இந்த நிலையில், கான்ஸ்டபிள் சோனால் கோசாய் தான் மன அழுத்தத்துக்கு ஆளாகி சோர்ந்து விட்டதாகக் கூறி ஒரு தனியார் மருத்துவமனையில் தாமாகவே தன்னை அனுமதித்துக் கொண்டுள்ளார். அதனால், மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல்

ஐபிஎல்

ரவீந்திர ஜடேஜா இன்னும் சில நாட்களில் சென்னை வந்து சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் பங்கேற்க உள்ளார். அதைத் தொடர்ந்து சிஎஸ்கே அணியினருடன் ஐக்கிய அரபு அமீரகம் கிளம்பிச் செல்ல இருக்கிறார். இந்த சூழ்நிலையில், சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

Story first published: Wednesday, August 12, 2020, 10:42 [IST]
Other articles published on Aug 12, 2020
English summary
Ravindra Jadeja and his wife had argument with lady constable over not wearing mask. However, no compaints on each other from either side.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X