For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் - ஜடேஜா படைக்க போகும் சாதனை.. 7 பேருக்கு மட்டுமே கிடைத்த வாய்ப்பு

பிர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா அரிய சாதனை படைக்க உள்ளார்.

எட்ஜ்பாஸ்டன் மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்தாலும், பேட்ஸ்மேன்களுக்கு ரன் குவிக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது.

இதனையடுத்து பிளேயிங் லெவனில் இந்திய அணி எத்தனை சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடலாம் என்ற குழப்பத்தில் உள்ளது.

இந்திய அணிக்கு திரும்பும் கேஎல் ராகுல்.. எப்போது விளையாடுவார்? முக்கிய அப்டேட் வெளியானதுஇந்திய அணிக்கு திரும்பும் கேஎல் ராகுல்.. எப்போது விளையாடுவார்? முக்கிய அப்டேட் வெளியானது

ஆடுகளம்

ஆடுகளம்

இந்திய அணி 6 பேட்ஸ்மேன்கள், ஒரு ஆல்ரவுண்டர் சுழற்பந்துவீச்சு, ஒரு ஆல்ரவுண்டர் வேகப்பந்துவீச்சு மற்றும் 3 வேகப்பந்துவீச்சாளர் என்ற பார்முலாவை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு வேளை டெஸ்ட்டின் கடைசி 2 நாட்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தால், 2 சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து களமிறங்கலாம்.

அஸ்வினுக்கு வாய்ப்பு?

அஸ்வினுக்கு வாய்ப்பு?

ஒரு சுழற்பந்துவீச்சாளர் என்ற நிலை வந்தால், அஸ்வினுக்கும், ஜடேஜாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும். ஜடேஜா அல்ரவுண்டர் என்பதால் அவருக்கு தான் கூடுதல் வாய்ப்பு கிடைக்கும். கடந்த முறை அஸ்வினை அழைத்து சென்ற இந்திய அணி, இங்கிலாந்து தொடரில் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு தரவில்லை.

ஜடேஜா பேட்டிங்

ஜடேஜா பேட்டிங்

ஆனால், இங்கிலாந்தின் பந்துவீச்சை எதிர்கொள்ளும் போது இந்திய வீரர்கள் விக்கெட்டுகள் முதலில் சரிய வாய்ப்பு உள்ளது. இதனால், இந்தியாவின் பேட்டிங் ஆர்டர் ஆழமாக இருக்கும் வகையில் இருப்பது அவசியம். அதற்கு ஏற்றார் போல் ஜடேஜா முதல் இன்னிங்சில் 13 ரன்களும், 2வது இன்னிங்சில் 56 ரன்களும் எடுத்ததால், அவருடைய இடம் உறுதி.

விக்கெட்டுகள் மைல்கல்

விக்கெட்டுகள் மைல்கல்

இந்த நிலையில், ஜடேஜா நாளைய டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளை எடுத்தால், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற மைல்கல்லை அடைவார். இந்த மைல்கல்லை எட்டிய 8வது இந்திய வீரர் என்ற பெருமையை ஜடேஜா பெறுவார். அதற்கு ஜடேஜா துல்லியமாக பந்துவீச வேண்டும்.

Story first published: Thursday, June 30, 2022, 21:55 [IST]
Other articles published on Jun 30, 2022
English summary
Ravindra Jadeja is all set to reach another milestone in Eng test இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் - ஜடேஜா படைக்க போகும் சாதனை.. 7 பேருக்கு மட்டுமே கிடைத்த வாய்ப்பு
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X