For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவரா? இந்த நூற்றாண்டின் தலை சிறந்த இந்திய வீரர் அறிவிப்பு.. யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்!

மும்பை : டெஸ்ட் போட்டிகளில் 21ஆம் நூற்றாண்டில் இதுவரை உள்ள வீரர்களின் செயல்பாட்டை வைத்து மிகவும் மதிப்புமிக்க வீரர்களை தேர்வு செய்தது விஸ்டன் பத்திரிக்கை.

Recommended Video

Ravindra Jadeja named as Most Valuable Player by Wisden.

இந்த பட்டியலில் யாருமே எதிர்பாராத ஒரு வீரருக்கு இந்திய அளவில் முதல் இடம் கிடைத்துள்ளது.

சிறந்த டெஸ்ட் வீரர்கள் என நாம் மனதில் வைத்திருக்கும் பலர் அந்த முதல் இடத்தை பெறவில்லை. மாறாக ஆல்-ரவுண்டர் ஒருவர் முதல் இடம் பெற்றுள்ளார்.

5 சதம்.. மறக்க முடியாத அடிலைட் டெஸ்ட்.. நிறைய பாடம்.. சிலாகிக்கும் விராட் கோலி 5 சதம்.. மறக்க முடியாத அடிலைட் டெஸ்ட்.. நிறைய பாடம்.. சிலாகிக்கும் விராட் கோலி

யார் அந்த வீரர்?

யார் அந்த வீரர்?

அந்த ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தான். ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்ஷ்மன், சச்சின், விராட் கோலி, என அத்தனை டெஸ்ட் ஜாம்பவான்கள் இருந்தும் ஜடேஜா தான் அதிக மதிப்புமிக்க வீரராக பட்டியலில் இந்திய அளவில் முதல் இடம் பிடித்துள்ளார்.

உலக அளவில்..

உலக அளவில்..

அது மட்டுமில்லை. உலக அளவில் முத்தையா முரளிதரனுக்கு அடுத்து இரண்டாம் இடம் பிடித்தும் அசர வைத்துள்ளார் ரவீந்திர ஜடேஜா. ஜடேஜா வெறும் 49 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி உள்ளார். ஆனாலும், அதற்குள் தான் எத்தனை முக்கியமான வீரர் என்பதை நிரூபித்துள்ளார்.

அதிக மதிப்புமிக்க வீரர்கள்

அதிக மதிப்புமிக்க வீரர்கள்

விஸ்டன் எனும் கிரிக்கெட் பத்திரிக்கை இந்த அதிக மதிப்புமிக்க வீரர்கள் பட்டியலை தயார் செய்துள்ளது. ஒரு வீரரின் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என அனைத்தையும் கணக்கில் கொண்டு, அதற்கு மதிப்பெண் கொடுக்கப்பட்டு இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜடேஜா பெற்ற புள்ளிகள்

ஜடேஜா பெற்ற புள்ளிகள்

இதில் ரவீந்திர ஜடேஜா 97.3 புள்ளிகள் பெற்று, முத்தையா முரளிதரனுக்கு அடுத்த இடத்தை பெற்றுள்ளார். அதன் மூலம் உலக அளவில் இரண்டாம் இடமும், இந்திய அளவில் முதல் இடமும் பிடித்து அசத்தி இருக்கிறார். இது பற்றி விஸ்டன் பத்திரிக்கையே ஆச்சரியம் தெரிவித்துள்ளது.

நிரந்தர வீரர் இல்லை

நிரந்தர வீரர் இல்லை

இந்திய அளவில் முதல் இடத்தை ரவீந்திர ஜடேஜா பெற்றது ஆச்சரியமான ஒன்று. அவர் டெஸ்ட் அணியில் நிரந்தர வீரரும் இல்லை. ஆனால், அவர் எப்போது ஆடினாலும் முன்னிலை பந்துவீச்சாளராகவும், ஆறாவது இடத்தில் பேட்டிங்கும் செய்துள்ளார். அதன் மூலம் போட்டிகளில் அதிக அளவு ஈடுபட்டுள்ளார்.

சராசரி

சராசரி

மேலும், ஜடேஜாவின் பந்துவீச்சு சராசரி 24.62. இது ஷேன் வார்னேவின் சராசரியை விட சிறந்தது. அவரது பேட்டிங் சராசரி 35.26. இது ஷேன் வாட்சனை விட சிறந்தது. அவரது பந்துவீச்சுக்கும், பேட்டிங்கிற்கும் உள்ள சராசரி வித்தியாசம் 10.62 ஆகும்.

சிறந்த சராசரி

சிறந்த சராசரி

அவரது சராசரி வித்தியாசம் இந்த நூற்றாண்டில் 1000 ரன்கள் மற்றும் 150 விக்கெட்கள் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதன் மூலம் அவர் எத்தனை சிறந்த ஆல்-ரவுண்டர் என்பது தெரிய வருகிறது. எனினும், ஜடேஜாவுக்கு இந்திய அணியில் நிரந்தர இடம் இல்லை.

மாற்று வீரர்

மாற்று வீரர்

டெஸ்ட் அணியில் அவர் மாற்று வீரராகவே இருக்கிறார். சில போட்டிகளில் ஆடும் அவர், சில போட்டிகளில் வெளியே அமர வைக்கப்படுகிறார். ஒருநாள் அணியிலும் கூட இதே நிலையில் தான் இருக்கிறார் ஜடேஜா. 2009இல் டெஸ்டில் அறிமுகம் ஆன ஜடேஜா இதுவரை 49 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி உள்ளார்.

தொடர்ந்து வாய்ப்புகள்

தொடர்ந்து வாய்ப்புகள்

தற்போது இந்திய அளவில் இந்த நூற்றாண்டின் மிகவும் மதிப்புமிக்க வீரர் என தெரிய வந்துள்ள நிலையில் ரவீந்திர ஜடேஜாவுக்கு இனியாவது இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Wednesday, July 1, 2020, 14:08 [IST]
Other articles published on Jul 1, 2020
English summary
Ravindra Jadeja named as Most Valuable Player of 21st Century by Wisden.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X