For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

'முரட்டு' ஜிம்.. அதுவும் வீட்லயே.. 'மிரள' வைக்கும் ஜடேஜா - அசத்தல் வீடியோ

மும்பை: உடம்புக்கு ஏற்ற சட்டை-னு சொல்வாங்க. அதுபோல, கிரிக்கெட்டுக்கு ஏற்ற ஒரு ஃபிஸிக் என்றால் எது ரவீந்திர ஜடேஜா தான்.

கொரோனா காரணமாக ஐபிஎல் பாதியில் நிறுத்தப்பட்டிருப்பதால், புரஃபஷ்னல்ஸ் கிரிக்கெட்டர்ஸ் அனைவரும் ஐபிஎல் டோனில் இருந்து வெளியேறி, இங்கிலாந்து டூருக்கு ரெடி வருகின்றனர்.

அந்த 6 நாள் கணக்கு.. ஐபிஎல் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு பின் சிஎஸ்கே மேட்சும் ஒரு காரணமா? - பின்னணி அந்த 6 நாள் கணக்கு.. ஐபிஎல் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு பின் சிஎஸ்கே மேட்சும் ஒரு காரணமா? - பின்னணி

அதேசமயம், கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி கட்டாயம் என்பதால், வீரர்கள் அடுத்தடுத்து அதையும் போட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட ஒருமாத இடைவெளி ஏற்பட்டுள்ளதால், தங்கள் ஃபிட்னஸிலும் தீவிர கவனம் செலுத்தி வருகின்

 அணியில் ஜடேஜா

அணியில் ஜடேஜா

இந்திய கிரிக்கெட் அணி, வரும் ஜூன் 18ம் தேதி, இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்துடன் மோதுகிறது. அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில், இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் ஆக., 4ம் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. கிட்டத்தட்ட மூன்றரை மாதங்கள் நடைபெறவுள்ள இந்த டூருக்கான, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, ஜூன் மாதம் 2ம் தேதி இங்கிலாந்துக்கு புறப்படுகிறது. இந்த அணியில் 20 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 4 மாற்று வீரர்கள் உடன் அழைத்து செல்லப்படுகிறார்கள்.

 உச்சபட்ச திறமை

உச்சபட்ச திறமை

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில், காயம் காரணமாக வெளியேறிய ஜடேஜா, அதன் பின் இந்தியாவில் நடந்த இங்கிலாந்து தொடரிலும் பங்கேற்கவில்லை. ஏறக்குறைய 6 மாதங்கள் கழித்து, மீண்டும் டெஸ்ட் அணியில் அவர் இடம் பிடித்துள்ளார். அதுவும், சவால் நிறைந்த பிரிட்டன் மண்ணில் மீண்டும் களமிறங்குகிறார். ஃபாஸ்ட், பவுன்ஸ், அட்டாக் என்று முழுக்க முழுக்க அக்ரெஸிவ் நிறைந்த இங்கிலாந்து மைதானங்களில், ஸ்பின்னர்களின் பாட்சா அவ்வளவாக பலிக்காது. ஆகையால், தனது கம்பேக் கவனிக்கத்தக்க வகையில் இருக்க வேண்டும் என்றால், ஜடேஜா தனது உச்சபட்ச திறமையை வெளிக்கொணர வேண்டும்.

 ஆனா இது இங்கிலாந்து

ஆனா இது இங்கிலாந்து

பாதியில் நிறுத்தப்பட்டாலும், ஐபிஎல் 2021 தொடரில், சென்னை விளையாடிய பெரும்பாலான போட்டிகளில், ஆல் ரவுண்டராக அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் ரவீந்திர ஜடேஜா தான். அசுரத்தனமான ஃபீல்டிங், டெத் ஓவர்சில் பறக்கவிடப்பட்ட சிக்ஸர்கள், ஸ்டெம்ப்புகளை தகர்த்த ஸ்பின் அட்டாக் என்று 3 டைமன்ஷனில் ஜொலித்தார். ஆனால், இந்த அத்தனை சாகசமும் இந்திய பிட்சில் நடந்தது. ஆனால், இப்போது ஜடேஜா விளையாடப் போவது இங்கிலாந்து பிட்ச். ஆகையால், சவால் முற்றிலும் வேற மாதிரி இருக்கும்.

கம்ப்ளீட் ஜிம்

அந்த வகையில், இங்கிலாந்து டூருக்கு தயாராகும் விதமாக, தான் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை ஜடேஜா வெளியிட்டுள்ளார். 'Preparation starts here' என்ற கேப்ஷனுடன் அந்த வீடியோவை அவர் பதிவிட்டுள்ளார். கிட்டத்தட்ட ஒரு கம்ப்ளீட் ஜிம் போலவே உள்ளது அவரது உடற்பயிற்சி கூடம். வாடகைக்கு விட்டால், மாசம் 10 ஆயிரம் வாங்கலாம் போல. அந்தளவுக்கு தேவையான அத்தனை ஒர்க் அவுட் உபகரணங்களையும் வைத்திருக்கிறார்.

Story first published: Thursday, May 13, 2021, 10:07 [IST]
Other articles published on May 13, 2021
English summary
Ravindra Jadeja work out video England Tour - ரவீந்திர ஜடேஜா
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X