For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்த 2 பேரும் ஏன் இல்ல..? யாரு விட்டாலும், இவரு இந்த பிரச்னைய விட மாட்டாரு போல..!

Recommended Video

இந்த 2 பேரும் ஏன் இல்ல..? யாரு விட்டாலும், இவரு இந்த பிரச்னைய விட மாட்டாரு போல..!

மும்பை: உலக கோப்பையில் ஆட தகுதி இருந்தும் அம்பத்தி ராயுடு, ரகானே புறக்கணிக்கப்பட்டது வேதனையானது என்று தலைமை பயிற்சியாளர் பதவிக்கு போட்டியிடும் ராபின் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி, தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்க அமெரிக்கா சென்றிருக்கிறது. தொடர் முடியும் வரை ரவி சாஸ்திரியே பயிற்சியாளராக நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் மற்றும் பேட்டிங், பவுலிங், பீல்டிங் பயிற்சியாளர்களுக்கான பதவிக்காக விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து ஜெயவர்தனே, டாம் மூடி, மைக் ஹெசன் ஆகியோர் விண்ணப்பிப்பதாக தகவல்கள் வெளியாகின.

ராபின்சிங் அப்ளிகேஷன்

ராபின்சிங் அப்ளிகேஷன்

பீல்டிங் பயிற்சியாளர் பொறுப்புக்கு ஜான்டி ரோட்ஸ் விண்ணப்பித்துள்ளார். அதன் பிறகு ராபின் சிங் விண்ணப்பித்து இருக்கிறார். அவர் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். ஏற்கனவே 2007ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டு வரையிலான 2 ஆண்டுகள் பீல்டிங் பயிற்சியாளராக இருந்தவர்.

ரவி சாஸ்திரி மீது புகார்

ரவி சாஸ்திரி மீது புகார்

இந்நிலையில், ரவி சாஸ்திரியை தொடாமல் குற்றம்சாட்டி வருகிறார். இது குறித்து பேசிய ராபின் சிங், இப்போது இருக்கு பயிற்சியாளரின் கீழ் இரண்டு அடுத்தடுத்த உலக கோப்பைகளில் இந்திய அணி அரையிறுதியுடன் வெளியேறியது.

முக்கிய தருணம்

முக்கிய தருணம்

டி20 உலக கோப்பையிலும் இந்திய அணி சரியாக ஆடவில்லை. 2023ம் ஆண்டு உலக கோப்பையை மனதில் வைத்து அதிரடி மாற்றங்களை கொண்டுவர வேண்டிய தருணம். மனதளவில் ஆட்டத்திற்குள் ஆழ்ந்து செல்ல வேண்டும்.

என்ன மனநிலை?

என்ன மனநிலை?

அணியானது தற்போது இருக்கும் நிலையை கருத்தில்கொண்டு வீரர்களின் முகத்தைப் பார்த்து அவர்களின் மனநிலையை புரிந்துகொண்டு, முக்கியமான முடிவுகளை எடுக்க உதவ வேண்டும் என்றார்.

Story first published: Wednesday, July 31, 2019, 15:11 [IST]
Other articles published on Jul 31, 2019
English summary
Rayudu, rahane would be in wc squad says former coach robin singh.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X